மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினர் 10 பேரை அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க.,வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போயஸ் கார்டனில் ஆலோசனை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க, சார்பில் பன்னீர் செல்வம் செங்கோட்டையன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டுள்ளனர். மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே. ரங்கராஜன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அ.தி.மு.க.,வுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். பின்னர் பேசிய ராமகிருஷ்ணன், பேச்சவார்த்தை நாளையும் தொடரும். அ.தி.மு.க., அறிவித்த மேயர் வேட்பாளர்கள் இறுதியானதல்ல. பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாறலாம் என கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பாண்டியன் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய தா.பாண்டியன் அ.தி.மு.க.,வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த குழுவில் பழநிசாமி, சிவபுண்ணியம், குணசேகரன் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
2 hour(s) ago