உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறை மீறல்:தே.மு.தி.க., கொடிகள்,வளைவு அகற்றம்

ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறை மீறல்:தே.மு.தி.க., கொடிகள்,வளைவு அகற்றம்

ராமநாதபுரம்:தேர்தல் பிரசாரத்திற்காக, ராமநாதபுரம் வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வைத்த அலங்கார வளைவு, கொடி கம்பங்களை நகராட்சியினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தில் , உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க.,வினரை ஆதரித்து பிரசாரம் செய்ய, நேற்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார். அவரை வரவேற்க, கட்சியினர் ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகில் துணியால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளையும், ரோட்டில் நீண்ட தூரத்திற்கு கட்சி கொடியையும் வைத்திருந்தனர். நேற்று காலை, தேர்தல் அலுவலரான நகராட்சி கமிஷனர் முஜ்புர் ரஹ்மான், தேர்தல் உதவி அலுவலர்கள் மதிவாணன், சந்திரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன், தே.மு.தி.க.,வினர் வைத்திருந்த அலங்கார வளைவு, 250க்கும் மேற்பட்ட கட்சி கொடிகம்பங்களை அகற்றி, பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை