மருத்துவ கல்லூரி மாணவன்தூக்கு போட்டு தற்கொலை
வாழப்பாடி:தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில், இரண்டாமாண்டு படிக்கும் மாணவன், பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி, தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கல்லூரியில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி எழில்நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் - செல்வி தம்பதியருக்கு, இருமகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்தமகன் அதியமான், 22, கோவையிலுள்ள ராமகிருஷ்ணா கல்லூரியில் ஏரோநேட்டிகல் இன்ஜினியரிங், இறுதியாண்டு படிக்கிறார். இளைய மகனான மதுசூதணன், 19, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த, 9ம் தேதியன்று, கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வந்த மதுசூதனன், குடும்பத்தினருடன் சகஜமாக இருந்தார். நேற்று காலை, ஆசிரியரான அவர் தந்தை பள்ளிக்கும், தாய் செல்வி, வங்கியில் பணம் எடுக்கவும் சென்றனர்.அந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த மதுசூதணன், முதல் மாடிக்கு சென்று, போன் போட வைக்கப்பட்டிருந்த கொக்கியில், தற்கொலை செய்து கொண்டார். வங்கியில் இருந்து திரும்பிய அவரது தாய், மதுசூதணன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சுப்பிரமணியன் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில், தற்கொலை செய்வதற்கு முன் மாணவன், தன் பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், 'அன்புள்ள குடும்பத்துக்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்யக் கூடாத தவறை செய்து விட்டேன். அதனால் என்னால் டாக்டராக முடியாது. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. சாரி அப்பா, அம்மா' என, எழுதப்பட்டிருந்தது.அக்கடித்தை கைப்பற்றிய போலீசார், கல்லூரியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து, விசாரனை நடத்த முடிவு செய்துள்ளனர்.