உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர் பதவி நீட்டிப்பை எதிர்த்து வழக்கு

துணைவேந்தர் பதவி நீட்டிப்பை எதிர்த்து வழக்கு

சென்னை:அண்ணா பல்கலை துணைவேந்தராக மன்னர் ஜவகருக்கு, பதவி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.ஐகோர்ட் வழக்கறிஞர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், 'அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகருக்கு, ஓராண்டு பதவிக்காலம் நீட்டிப்பு வழங்கி, பல்கலைக் கழகங்களின் வேந்தர் உத்தரவிட்டுள்ளார். இது, அண்ணா பல்கலைச் சட்டப் பிரிவுக்கு முரணாக உள்ளது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். பதவி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மணிகண்டன் வரதன் செட்டியார் ஆஜரானார். 'முதல் பெஞ்ச்' உத்தரவில், 'போதிய ஆவணங்கள் இல்லாததால், வேந்தரின் உத்தரவில் குறுக்கிட எந்த காரணமும் இல்லை. ஆவணங்களை சமர்ப்பிக்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது' என கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி