உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் பலி

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் பலி

கோவை: கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலியாயினர். கருமத்தம்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியல் துறை சார்ந்த விழா நடைபெற்றது. இதற்காக மாணவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் பொருட்டு பிளக்ஸ் போர்டுகளை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிளக்ஸ் போர்டின் ஒரு பகுதி மின்வயரில் உரசியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இச்சம்பவத்தில் விக்னேஷ்,நந்தகுமார், வேலுமணி ஆகிய மூன்று மாணவர்கள் பலியாயினர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ