| ADDED : செப் 17, 2011 10:53 PM
பரமக்குடி: ''பரமக்குடி துப்பாக்கிச்சூடு தேவையற்றது, இதை போலீசார் தவிர்த்திருக்கலாம்'' என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு கூறினார்.
நல்லகண்ணு தலைமையில் சென்ற குழுவினர் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்து, சம்பவ இடங்களை பார்வையிட்ட பின் கூறியதாவது: துப்பாக்கிச் சூடு தேவையற்ற ஒன்று. இதை தவிர்த்திருக்கலாம். போலீசார் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. இறந்தவர்களுக்கு நிவாரண தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்க வேண்டும். காலம் கடத்தாமல் குறிப்பிட்ட மாதத்திற்குள் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும். இச் செயலை கண்டித்து மாவட்டத் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டங்களிலும் செப்.,20ல் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம், என்றார்.