வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எங்க அவரு ? யாரு ?
அமைச்சராக, ஆளும் கட்சியின் கொங்கு மாவட்ட தூணாக இருந்த போதே செந்தில் பாலாஜி ஒரு வருடத்துக்கு மேலாக சிறையில் இருந்தார் , பின் அமைச்சர் பதவி இழந்தார் இனி வரும் நாட்கள் இவருக்கு இன்னும் சவாலாக இருக்கும்
விஜயை காங்கிரஸ் மற்றும் பிஜேபி இந்த கரூர் சம்பவத்தை வைத்து ,அவரை தங்களது பகடை காயாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்
ராகுல் அடுத்த லோக் சபா தேர்தலில் வயநாட்டை விட்டு வேலூரில் போட்டியிடலாம்
அரசியலில் துணிச்சல் மிக மிக அவசியம் .ஜெயலலிதாவுக்கு அந்த துணிச்சல் அவருக்கு பின்னால் இருந்த லச்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் பெண்கள் மூலம் வந்தது தலைவர்களும் மனிதர்களே, சில நேரங்களில் அவர்களுக்கும் பய உணர்வுகள் ஏற்படுவது இயற்கை அந்த பய உணர்வை வெளி காட்டி கொள்ளாமல் தாம் ஒரு அஞ்சா நெஞ்சர்கள் என்பதை காட்டி கொள்வதைத்தான் ஆளுமை என்று போற்றப்படுகிறது. விஜய்க்கு இன்னும் அந்த ஆளுமை வரவில்லை . ஆனால் திமுகவின் சில செயல்கள் , மாணவர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர் ஓட்டும் 1980 கால கேலி கூத்துக்கள் ,விஜய்க்கு ஆளுமையை வளர்க்கும் செயல்களாகவே முடியும்
கரூர் சம்பவத்தில் விஜய் பயந்து போய் இருப்பதை திமுக தனக்கு சாதகமாக்கி கொண்டு ,விஜயை அரசியல் ரீதியாக தோற்று போய் ஓடி விட்டவராக காட்ட திமுக முயற்சிக்கிறது ஆனால் திமுகவின் இந்த முயற்சிகள் பூமராங் ஆகி திமுகவைய தாக்கப்போகிறது
விஜய் மீது ஏற்கனவே ஹைகோர்ட் கடும் அதிருப்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளது. ஆகவே விஜய் கோர்ட் மூலமாகவே தனக்கு சாதகமான உத்தரவுக்கு காத்திருக்கிறார் ஏற்கனவே மாநில ,மத்திய அரசின் ஆளும் கட்சிகளை எதிரிகள் என அறிவித்து அரசியல் செய்யும் விஜய், நீதி துறையையும் பகைத்து கொண்டால் மிக கடினமாகிவிடும் ...ஆகவே விஜயின் நிலைப்பாடு சரியானதே