உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் வந்த இலவச கலர் "டிவிகள்: திருப்பூர் போலீசார் பறிமுதல்

ரயிலில் வந்த இலவச கலர் "டிவிகள்: திருப்பூர் போலீசார் பறிமுதல்

திருப்பூர்: மங்களூர் சென்ற ரயிலில் இருந்த 12 இலவச கலர் 'டிவி'களை திருப்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருச்சியில் இருந்து மங்களூர் நோக்கி திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வந்துள்ளது; முன்பதிவு செய்யப்படாத பெட்டி கழிவறை அருகே 12 இலவச கலர் 'டிவி'கள் இருந்துள்ளன. பயணிகள் ஒவ்வொரு ஸ்டேஷனில் ஏறி இறங்கும் போதும், கழிவறைக்கு சென்று வந்த நிலையிலும், வைக்கப்பட்டிருந்த 'டிவி'கள் இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளன. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம், பயணிகள் விவரத்தை கூறினர்; ரயில் திருப்பூரில் இருந்து புறப்படும் வரை, பெட்டியில் உள்ள பயணிகளிடம் இலவச 'டிவி'கள் குறித்து போலீசார் விசாரித்தனர். ரயில் புறப்பட்ட நிலையில், இலவச 'டிவி'களை பறிமுதல் செய்த போலீசார், திருப்பூர் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்; நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்ட 12 இலவச கலர் 'டிவி'களும், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த 15 அல்லது 30 நாட்களுக்குள், 'டிவி'களை கேட்டு யாராவது வந்தால், ரயிலில் இத்தனை 'டிவி'களை எடுத்து வந்த காரணம் குறித்து விசாரணை நடத்தி, பின்னர் ஒப்படைக்கப்படும்; இல்லையெனில், பொது ஏலத்தில் விடப்படும் என, ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி