உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு சார்பில் வாதாடினார் நார்மன்

அரசு சார்பில் வாதாடினார் நார்மன்

புதுடில்லி: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக சலுகைகள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் ரோகிங்டன் நாரிமன் வாதாடினார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக சலுகைகள் வழங்கியதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் வாதாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கபில்சிபல் ரோகிங்டன் நாரிமன் என்ற தனியார் வக்கீலை இவ்வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்தார். இது தமக்கு ஏற்பட்ட இழுக்காக கருதி, கோபால் சுப்ரமணியனம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், இவ்வழக்கில் ரோகிங்டன் நாரிமன் ஆஜராகி வாதாடினார். இதனால் கோபால் சுப்ரமணியம் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ