மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியீடு
51 minutes ago
உரிமைத்தொகை நிதி: தமிழக அரசு விளக்கம்
3 hour(s) ago
ஈரோடு; தமிழகம் முழுவதும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவற்றிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள சிறுத்தைகள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதால், அதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக, வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில், 2006ல், 68 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது, 100க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், மக்கள் தொகை பெருக்கத்தால், புலிகளின் உலாவிடம் குறைந்ததால், புலிகளுக்குள் எல்லைத் தகராறு ஏற்படவும், அதனால், புலிகளின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.தற்போது, புலிகளின் எண்ணிக்கை உயர்வாலும், அவற்றின் உலாவிடம் குறைந்ததாலும், சிறுத்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 2010 கணக்கெடுப்பின் படி, புலிகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது. எனினும், பெருகி வரும் மக்களின் அடாவடியான செயலால், வனப்பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. பொதுவாக புலிகள் வசிக்க, 9 மில்லியன் எக்டேர் நிலப்பரப்பு தேவை. தற்போது, புலிகளின் வசிப்பிடம், 7.5 மில்லியன் எக்டேராக குறைந்து விட்டது.சாதாரணமாக, 21 சதுர கி.மீ., உலா வரவேண்டிய ஆண் புலிகள், 14 கி.மீ.,யும், 15 கி.மீ., உலா வரவேண்டிய பெண்புலிகள், 10க்கும் குறைவான கி.மீ.,யிலும் தான் உலா வருகின்றன.ஏறக்குறைய, சிறுத்தைகளும் இதே அளவில் தான் தங்களது உலாவிடத்தை நிர்ணயம் செய்து கொள்கின்றன. புலிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, சிறுத்தைகள் சற்று தள்ளியே வசிக்கும்.தமிழகத்தில் சில ஆண்டுக்கு முன், 300க்கும் மேல் சிறுத்தைகள் இருந்தன. தற்போது, 170க்கும் குறைவான சிறுத்தைகளே உள்ளன. புலிகளின் எண்ணிக்கை உயர்வால், சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைவது வாடிக்கை தான். அதற்காக, சிறுத்தை இனங்கள் அழிந்து விட்டது என, கூற முடியாது.உயிரை காப்பாற்றிக் கொள்ள, மற்ற மாநிலத்துக்கு சிறுத்தைகள் இடம் பெயர்ந்திருக்கலாம். தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலத்திலும் சிறுத்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.தமிழகம் முழுவதும் சிறுத்தைகள் கணக்கெடுக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
51 minutes ago
3 hour(s) ago