உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களை தேர்வு செய்யாத தேர்வு வாரியத்தை மூடி விடலாம்: ராமதாஸ்

ஆசிரியர்களை தேர்வு செய்யாத தேர்வு வாரியத்தை மூடி விடலாம்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஒரு ஆசிரியர் கூட தேர்வு செய்யப்படாத நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு?' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bf6f6da1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில், 2024ல், அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 2023ல் தேர்ந்தெடுக்கப்பட்ட, 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்னும் பணியாணை வழங்கப்பட வில்லை. 2,768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க, கடந்த ஆண்டு ஜூலையில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆனாலும் கூட, இன்று வரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை.கடந்த ஆண்டு ஏப்ரலில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இன்று வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பு பெறாமல் தவித்து வருகின்றனர்.அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை குறித்த நேரத்தில் தேர்வு செய்யவே, ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே ஒரு ஆசிரியரைக்கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால், அந்த வாரியம் எதற்காக இருக்க வேண்டும்; அதை மூடி விடலாமே?அரசு பள்ளிகள் மீது அரசுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தால், ஆசிரியர் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajan A
மார் 06, 2025 09:55

பாமகவை தேர்ந்தெடுக்காத மக்களை என்ன செய்ய போகிறீர்கள்? மத்திய அரசு பணம் தரவில்லை என்ற அழுகாச்சி தான் பதிலாக வரும்


ஜான் குணசேகரன்
மார் 06, 2025 09:50

ஜாதி இல்லாமல் ஒரு வரி பேசிவிட்டார். அதிசயம்.


அப்பாவி
மார் 06, 2025 08:19

காசு வாங்கிட்டு திருட்டு திராவுடனுங்களை ஆசிரியர்களாக நியமிச்சுருவோம். ஓக்கேவா?


naranam
மார் 06, 2025 07:41

அப்படியே உங்களின் இந்த ஜாதி வெறி கட்சியையும் ஊத்தி மூடி விட்டால் தமிழகத்துக்கு நல்லது.


பல்லவி
மார் 06, 2025 06:18

அந்த குருவையே முடித்த பின் சிஷ்யர்களுக்கு என்ன வேலை


Appa V
மார் 06, 2025 06:14

கிட்டத்தட்ட 50 வருஷமா அரசியல் பண்ணியும் பெருசா எதுவும் சாதிக்கவில்லை ..இவரை பார்த்தாவது அல்லது விஜயகாந்த் கட்சியை பார்த்தாவது விஜய் ..சீமான் ...இவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்


Kasimani Baskaran
மார் 06, 2025 06:00

எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உருட்டித்திரியும் மாநில அரசை மட்டும் விட்டுவைக்க வேண்டுமாக்கும்?


Kasimani Baskaran
மார் 06, 2025 06:00

எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உருட்டித்திரியும் மாநில அரசை மட்டும் விட்டுவைக்க வேண்டுமாக்கும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை