மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
ராஜபாளையம் : சங்கரன்கோவில் அருகே, ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சர்வே கற்கள் மீது மோதிய செங்கோட்டை பாசஞ்சர் ரயில், விபத்திலிருந்து தப்பியது.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கரிவலம் வந்த நல்லூரில், செப்., 13ம் தேதி, தண்டவாளத்தில் சிமென்ட் கட்டைகளை வைத்து, ரயில் கவிழ்ப்பு முயற்சி நடந்தது. இதை ரயில்வே ஐ.ஜி., சுனில்குமார், நேற்று பார்வையிட்டார்.இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், ஐ.ஜி., பார்வையிட்ட அன்று இரவு, சங்கரன் கோவிலிலிருந்து 2 கி.மீ., தூரமுள்ள இளவன்குளம் தண்டவாளத்தில், வேலி அமைக்க பயன்படும் இரண்டு சர்வே கற்கள் வைக்கப்பட்டிருந்தன.அவ்வழியாக, இரவு 7.30 மணிக்கு சென்ற செங்கோட்டை பாசஞ்சர் ரயில், கற்கள் மீது மோதிச் சென்றதில், கற்கள் நொறுங்கியதோடு, தண்டவாள சிமென்ட் கட்டைகளும் சேதமுற்றன.ரயில் டிரைவர் தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்தை ரயில்வே டி.எஸ்.பி., தலைமையில், போலீசார் பார்வையிட்டனர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21