உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குலசையில் நாளை மகிஷாசூரசம்ஹாரம்

குலசையில் நாளை மகிஷாசூரசம்ஹாரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம், நாளை நள்ளிரவு நடக்கிறது.மைசூருக்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த இக்கோயில் தசரா திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முத்தாரம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான போரிடும் சூரனை, அம்மன் வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் பத்தாம் நாளான நாளை நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடக்கிறது. இதில், ஏராளமானோர் பங்கேற்பர். நேர்த்திக்கடனுக்காக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை பிரித்த பக்தர்கள், கோயிலைச் சேர்ந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சங்கர், ஊழியர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி