உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

சதி செய்கின்றனர்!பீஹாரில் அரசு பணியாளர் தேர்வாணையத்தை கண்டித்து, மாணவர்கள் அமைதியான முறையில் போராடினர். ஆனால், பா.ஜ.,வின் பி டீமைச் சேர்ந்த சிலர், மாணவர்களை தவறாக வழிநடத்தினர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்கள் சதி செய்கின்றனர்.தேஜஸ்வி யாதவ்தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்காங்., செய்யவில்லை!முன்னாள் பிரதமர் நரசிம்மராவை, அப்போதைய காங்கிரஸ் அரசு புறக்கணித்தது என்பது அனைவரும் அறிந்ததே. அவரை அக்கட்சியினர் அவமரியாதை செய்தனர். முன்னாள் பிரதமர் என்ற முறையில், டில்லியில் நரசிம்ம ராவுக்கு நினைவிடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை காங்., செய்யவில்லை.கவிதாதெலுங்கானா எம்.எல்.சி., - பாரத் ராஷ்ட்ர சமிதிதிசைதிருப்பும் பா.ஜ.!உ.பி., மக்களின் பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப, ஆளும் பா.ஜ., அரசு பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டுக்கடியிலும் சிவலிங்கம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அங்கேயும் ஆய்வு நடத்த வேண்டும்.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை