உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் குண்டுவெடிப்பு:அப்பாஸ்க்கு 15 நாள் காவல்

ஐகோர்ட் குண்டுவெடிப்பு:அப்பாஸ்க்கு 15 நாள் காவல்

புதுடில்லி;டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட, காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ்வை, 15 நாட்கள் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் காவலில் வைத்து விசாரிக்க, சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியது.கடந்த 7ம் தேதி நடந்த இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, அமீர் அப்பாஸ் தேவும், அபித் உசேன் என்பவரும், காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர். டில்லி அழைத்து வரப்பட்ட இவர்களில், அபித் உசேனை அக்டோபர் 5ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு நிறுவன சிறப்பு கோர்ட், நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.இந்நிலையில், அமீர் அப்பாஸ் தேவ்வை, அடுத்த மாதம் 7ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, சிறப்பு கோர்ட் நீதிபதி சர்மா, நேற்று உத்தரவிட்டார். கோர்ட்டில் நேற்று நடைபெற்ற ரகசிய விசாரணையின் போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அப்பாஸ் தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி காஸி மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் மட்டுமே உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை