உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது:ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது:ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

மதுரை:இரண்டரை ஆண்டுகளில், எல்லையைத் தாண்டி மீன் பிடித்த, 1,617 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைதானதாக, மத்திய வெளியுறவு இயக்குனர் தீபக் மித்தல், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டார்.இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைத் தவிர்க்க, துப்பாக்கி வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், ஸ்டாலின் மற்றும் கண்ணன் தனித்தனி பொது நல வழக்குகளை தாக்கல் செய்தனர். வழக்குகள், நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தன.வெளியுறவு இயக்குனர் தீபக் மித்தல் பதில் மனுவை, உதவி சொலிசிட்டர் ஜெனரல் செந்தில்வேலன் தாக்கல் செய்தார்.மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக மீனவர்களுக்கு பிரச்னை ஏற்படுகையில், மத்திய அரசு கண்டித்துள்ளது. மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டக் கூடாது. இரு நாட்டு மீனவர்களும், இதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்திய மீனவர்கள், எல்லை தாண்டுகின்றனர். இரண்டரை ஆண்டுகளில், எல்லை தாண்டிய 1,617 மீனவர்கள் கைதாகினர்.மூன்றாண்டுகளில், 9 பேர் கொல்லப்பட்டனர். 2008ல் இரு நாட்டு மீனவர்கள் பாதுகாப்புக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின், எல்லை தாண்டுவது குறைந்தது. கச்சத்தீவு மீட்பு குறித்து, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்குவது, நடைமுறைக்கு ஒத்துவராது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி