மேலும் செய்திகள்
விஜய் கூட்டத்தில் பலியானவரின் உடலை பெற மறுத்து முற்றுகை!
1 hour(s) ago
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 31
மர்ம பொருள் வெடித்ததால் கோர்ட் அருகே பரபரப்பு
6 hour(s) ago | 4
தேனி:ஊருக்குள் புகுந்த மரநாயை, வனத்துறையினர் மீட்டு வனத்திற்குள் விட்டனர்.தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில், அபூர்வ வகை மரநாய்கள் அதிகம் காணப்படுகின்றன. மரத்தில் ஏறி தேங்காய், மாங்காய், பலா உட்பட விளை பொருட்களை இவை சாப்பிடுகின்றன. நேற்று காலை வருஷநாடு அருகே, அரண்மனைபுதூர் கிராமத்திற்குள் மரநாய் புகுந்தது. ஆட்களை கண்டதும், அங்கிருந்த பள்ளிக்குள் ஓடி ஓளிந்தது. பொதுமக்கள் அதை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீண்டும் வனத்திற்குள் விட்டனர். டி.எப்.ஓ., கணேசன் கூறுகையில், 'தென் தமிழக மலைப்பகுதிகளில், அதிகம் காணப்படும் இவை, பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன,' என்றார்.
1 hour(s) ago
4 hour(s) ago | 31
6 hour(s) ago | 4