உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு விபத்தில் 4 ஆக உயர்ந்த பலி

பட்டாசு விபத்தில் 4 ஆக உயர்ந்த பலி

விருதுநகர்:விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் விநாயகர் கலர் மேட்ச் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆலை உரிமையாளர் விராச்சாமி உட்பட காயமுற்ற நான்கு பேரும் பலியானர் . சாத்தூர் சிந்தப்பள்ளியை சேர்ந்த வீராச்சாமி சொந்தமான விநாயகர் கலர் மேட்ச் ஒர்க்ஸ்' பட்டாசு ஆலை விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் உள்ளது. இங்கு நேற்று 'கலர் மத்தாப்பு பட்டாசு ' தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஒரு அறையின் ரேக்கில் வைக்கப்பட்டிருந்த கருமருந்து குச்சிகளை, பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தனர். அப்போது குச்சிகளிடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக, திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவுடையாபுரத்தை சேர்ந்த பசீர்முகமது மனைவி ராவியத் பீவி(50) அப்துல் ஷமீது மனைவி சையதுல்பீவி(60) அசன்முகமது மனைவி சுவேதாபீவி(50), ஆலை உரிமையாளர் விராச்சாமி காயமடைந்தனர். இவர்கள் விருதுநகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.இதில் ராவியத் பீவி நேற்று இரவு இறந்த நிலையில்,மற்ற மூன்று பேரும் இன்று இறந்தனர்.இதை தொடர்ந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்