உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-8

ரம்ஜான் சிந்தனைகள்-8

வேண்டாமே புகழ்ச்சிபுகழ்ச்சிக்கு மயங்காதவரே இல்லை. அந்தளவிற்கு புகழ் மீது நாட்டம் கொண்டு மக்கள் அலைகின்றனர். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட சம்பவத்தை படித்தால் திருந்துவர். தோழர் முஆதிப்னு அப்ரா வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற சிறுமிகள் பாடல்கள் பாடினர். அப்போது இஸ்லாத்திற்காக நடந்த பத்ரு போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளைப் பற்றி அவர்கள் புகழ்ந்தனர். அதில், 'நாளை நடப்பதை எங்களுக்கு தெரிவிக்கும் நபி' என ஒரு வரி அமைந்திருந்தது. உடனே அவர், ''இது தவறானது. பத்ரு போரில் பங்கேற்ற தியாகிகளை மட்டும் புகழ்ந்து பாடுங்கள்; என்னைப் பற்றி பாட வேண்டாம்'' என தடுத்தார். இது போல் யாராவது புகழ்ந்தால், 'நான் முஹம்மது. அப்துல்லாவின் புதல்வர். இறைவனின் துாதர். அவ்வளவு தான். முகஸ்துதி செய்வதை நான் விரும்பவில்லை' எனச் சொல்வார்.இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:02 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி