உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., மீண்டும் மலரும் பழக்க தோஷ பன்னீர்செல்வம்

அ.தி.மு.க., மீண்டும் மலரும் பழக்க தோஷ பன்னீர்செல்வம்

சென்னை:'ஒன்றிணைந்த அ.தி.மு.க., விரைவில் உருவாகும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.* பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் இணைந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி, அ.தி.மு.க., மீண்டும் மலரும்(என்னது மீண்டும் மலருமா? பா.ஜ., கூட்டணியில இருக்கறதால, பழக்க தோஷத்தில் அ.தி.மு.க., மலரும்னு சொல்லிட்டீங்களா?). உறுதியாக அனைவரும் இணைகிற காலம் வெகு துாரத்தில் இல்லை. * சசிகலா: அ.தி.மு.க., இணைவதற்கு சாதகமான நிலை உள்ளது. மக்களுக்காக நான் பேசுகிறேன். அ.தி.மு.க., ஒருங்கிணைக்கப்படும். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். ரவுடிகள் கொட்டம் அடக்கப்படும். மக்கள் நிம்மதியாக இருக்க, ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். சட்டசபை தேர்தலில் ஒன்றிணைந்த அ.தி.மு.க.,வை பார்ப்பீர்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.'நவயுக நாடகம்''திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கேட்டுள்ளாரே' என்ற கேள்விக்கு, பன்னீர்செல்வம் அளித்த பதிலில், ''தி.மு.க., கூட்டணி கட்சிகள் நடத்தும் நவயுக நாடத்திற்கு பதில் கூற முடியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ