உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலுவை நிதி : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

நிலுவை நிதி : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அரசு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவை நிதியை வழங்கிட கோரி முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித விவரம்:மத்திய அரசின் சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மத்திய அரசு முதல் தவணையாக ரூ. 573 கோடி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் போன்ற முன்னோடி மாநிலங்கள் பள்ளிகல்வி, உயர் கல்வியில் பல சிறப்பான செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய முந்தைய ஆண்டிற்கான நிலுவைத்தொகை ரூ.249 கோடியும் ,தற்போது நிலுவையில் உள்ள நிதியையும் தாமதமின்றி விரைந்து விடுவிக்க வேண்டும். உரி நேரத்தில் நிதியை விடுவிப்பது அவசியம். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பியாஸ்கான்
ஆக 28, 2024 09:59

எது மாறுனாலும் நிதி கேட்டு கடிதம் எழுதுவது மட்டும் மாறவே மாறாது கோவாலு.


Nandakumar Naidu.
ஆக 28, 2024 09:41

என்னமோ இவர் கடிதம் எழுதிய பிறகு தான் மத்திய அரசு நிலுவை தொகையை கொடுப்பது போல ஒரு பில்டப் கொடுப்பதே ஒரு வேலையாய்ப்போயிற்று இவர்களுக்கு. மக்கள் தான் திருந்த வேண்டும்.


Mani . V
ஆக 28, 2024 04:48

கடுதாசி தமிழில் தானே தலைவரே?


M Ramachandran
ஆக 28, 2024 03:13

முதல்வரும் மற்ற அமைச்சர்களும் டில்லிக்கு சும்மா எழுதிகொண்டே இருப்பதால் மக்களுக்கு என்ன நன்மை? கண்ணதுடையய்ப்பு நாடகம் எதற்கு? முன்பு போல் இல்லாமல் தர் போதைய மாநிலங்களை மத்திய அரசு கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டகிறது. கணக்கு கேட்டால ஆதியிலிருந்து இவர்களுக்கு பிணக்கு தான். கேரள அரசு முதல்வர் இப்போது பிரதமரை நேரிடையாகா சந்தித்து வயநாடு சீர் செய்வதற்கு நிதி வேண்டும் என்று நேரிடையாக சென்று கேட்கிறார். எங்கிருக்கிறது பிரச்னை?


Thirumal s S
ஆக 28, 2024 01:10

நமக்கு தர வேண்டியதை கேட்டால் அவர் அமெரிக்கா போகிறார் அங்கிருந்து வரும்போது கோடிகளை கொண்டு வருவார் அதனால் இனி மத்திய அரசிடம் நிதி கேட்க மாட்டார்னு நிறைய கமெண்ட்ஸ் இருக்கு அப்ப இனி வரியும் கொடுக்க தேவை இல்லையா


theruvasagan
ஆக 27, 2024 22:12

கொஞ்ச நேரம் முன்னாடிதான் அதாவது அமெரிக்கா போக ஏர்போர்டுக்கு கிளம்பும்போது அன்னிய முதலீட்டுக்காக.போடப்பட்ட 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ் 9,99,039 கோடிகளுக்கு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று உருட்டியாச்சு. அதுபோக இப்ப அமெரிக்கா போய்விட்டு வரும்போது டாலர் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதுல்ல. அப்புறம் எதுக்கு ஒன்றிய அரசிடமிருந்து 249 கோடி பிசாத்து காசு.


சமூக நல விரும்பி
ஆக 27, 2024 21:37

அமெரிக்காவிலிருந்து தொழில் தொடங்க பல ஆயிரம் நிருவனகளை நம் முதல்வர் கூடவே அழைத்து வர போகிறார். அதனால் இனி தமிழ் நாட்டுக்கு மத்திய அரசு நிதி எதுவும் தேவை இல்லை


Svs Yaadum oore
ஆக 27, 2024 21:02

டெல்லி 100 ரூபாய் காசு கொடுத்தாங்கன்னு தேனாம்பேட்டையில் வைத்து அதை விடியல் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்று சம்மதித்தார்கள் ..அதற்கு ராணுவ அமைச்சரே டெல்லியிருந்து நேரில் வந்து கொடுத்தார் ....அதுக்கும் மேலே என்ன நிலுவை தொகை?? ...


நசி
ஆக 27, 2024 20:51

1330 குறளோவியம் 2லட்சம்பிரதி பிரிண்ட்பண்ணி பள்ளிகளில் கொடுக்க. பிறகு 100 வயது கண்ட கலைஞருககு 11லட்சம் சிலைகள் அனனத்து தமிழ்நாடு கல்லூரி பள்ளிகளில் நிறுவ.....பள்ளி நிதி பயன்படும்


Svs Yaadum oore
ஆக 27, 2024 20:47

நிலுவை நிதியா ??.....செல்லாத 100 ரூபாய் காசை கொடுத்து டெல்லிக்காரனுங்க விடியலை நல்லா ஏமாத்திட்டாங்களா ??...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை