உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் .இந்நிலையில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வீரப்பன் தேடுதலில் இடம்பெற்றவரும்,அயோத்தி குப்பம் வீரமணியை சுட்டு கொன்றதிலும் பேர் வாங்கியவர் வெள்ளத்துரை. இவர் செய்த என்கவுன்டரால் வேகமாக பதவி உயர்வு பெற்று தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார்.

உள்துறை செயலாளர் மீது முதல்வர் அதிருப்தி

2013 ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லாக்கப் மரண புகாரில் வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என வெள்ளத்துரை அறிக்கை தாக்கல்செய்த நிலையில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. உள்துறை செயலாளராக உள்ள அமுதா அறிவித்த சஸ்பெண்ட் உத்தரவு தன்னிச்சையாக எடுத்த முடிவு என புகார் எழுந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு உள்துறை செயலாளர் அமுதாவை கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளத்துரை சஸ்பெண்ட்டிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இரண்டு முக்கிய நிபந்தனைகளுடன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

இரண்டு முக்கிய நிபந்தனைகளுடன் வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ஓய்வுக்கு பின் வழங்கப்படும் பணப்பலன்களில் ரூ.5 லட்சம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

spr
ஜூன் 02, 2024 07:05

பல குற்றவாளிகள் அரசியல்வியாதிகள் உட்பட குற்றம் நிரூபணம் ஆனாலும் விசாரணை அதிகாரிகள் ஏதோ ஒரு காரணத்தால் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கொடுக்காமல் இருப்பதாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் காரணம் காட்டி நீதிபதிகளும் அவர்களை தப்ப விடுகிறார்கள் அந்த வகையில் நடத்திய "என்கவுண்டர்" உண்மையிலேயே சட்டத்திற்கு கட்டுப்படாத, சட்டத்தால் தண்டிக்கப்படமுடியாத குற்றவாளிகள் மேல்தான் என்றால் இவருக்கு தமிழக அரசு "கலைமாமணி" விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்


Palanivel
ஜூன் 01, 2024 12:57

நேற்று ஒரு முடிவு இன்று ஒரு முடிவு அரசின் ஆளுமையில் எதுவுமே நிரந்தரமில்லை


S.PALANIVELU
ஜூன் 01, 2024 09:52

உத்தரவு...ரத்து...அட சூப்பரு


முரளி
ஜூன் 01, 2024 07:20

சூப்பர்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 01, 2024 06:54

சர்வாதிகாரி ஆட்சியில் அரசு ஊழியர்களின் நிலை ?


Jay
ஜூன் 01, 2024 06:43

இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களும் பிச்சை போட்ட ஆட்சி இப்படி கோமாளித்தனமாக தான் நடக்கும். இன்னும் அவர்களே ஆட்சியை பிடித்தால் நாடு சர்வ நாசமாக போகும். கவனம் மக்களே, ஹிந்து மாக்களே.


GMM
ஜூன் 01, 2024 05:57

வெள்ள துரையால் பாதிக்கப்பட்ட திராவிட கோஷ்டி சஸ்பெண்ட் அழுத்தம் கொடுத்து இருக்கும். ஆகவே 30 ம் தேதி அறிவிப்பு. பணியை பாராட்டி ஒரு கோஷ்டி சஸ்பெண்ட்டை எதிர்த்து இருக்கும். மறுநாள் சஸ்பெண்ட் ரத்து. திராவிட அரசு நிர்வாகம் இஷ்டப்படி தான் இருக்கும். இரு நடவடிக்கையில் கட்சி பிரதிநிதிக்கும் பண பயன்.? 5 லட்சம் பிடித்து அரசுக்கும் பயன். திராவிட மாடலில் IAS முழு நேர அரசியல். பகுதி நேர அரசு அதிகாரி. உள்துறை அமைச்சர் பார்வைக்கு பின்னரே இரு நடவடிக்கைகள் நடந்து இருக்கும். சஸ்பென்ட் என்றால் பாதி சம்பளம். ஓய்வு நாளில் சஸ்பெண்ட் நாடகம் எப்போது முடிவுக்கு வரும்.?


r ravichandran
ஜூன் 01, 2024 01:59

வெள்ளை துரை அவர்களின் சஸ்பென்ட் நிகழ்வை கடுமையாக விமர்சனம் செய்து எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முழுவதும் காவல் துறையினர் குரல் கொடுக்க ஆரம்பித்தது தான் உளவு துறை மூலம் தெரிந்து கொண்டு அரசு சஸ்பென்ஷன் ரத்து செய்து உள்ளது என்று தகவல் வருகிறது.


Anantharaman Srinivasan
ஜூன் 01, 2024 00:10

இன்னும் ஓரே வாரத்தில் அமுதா... இடமாற்றம்..??


Anantharaman Srinivasan
ஜூன் 01, 2024 00:08

இரண்டு முக்கிய நிபந்தனைகளுடன்.. ஒரு நிபந்தனை 5 லட்சம் பிடித்தது.இரண்டாவது நிபந்தனை என்ன..?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ