உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நான்கு சட்ட திருத்த மசோதாக்களுக்கு இன்று(18.07.2024) கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னையில் கழிவு நீர் இணைப்பை கட்டாயமாக்குதல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்துதல், புதிய மாநகராட்சிகளுக்கு வருவாய் , மக்கள் தொகை வரம்பு குறைத்தல், சென்னை காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஆகிய பெரு நகரங்களுக்கும் விரிவுபடுத்துதல் என 4 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நான்கு மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜூலை 19, 2024 10:50

இவர் கூட எப்போதாவது வேலை செய்கிறாரே!


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 10:40

வேங்கைவயல், நாங்குநேரி எப்போ மாநகராட்சிகளாகும் ?


GMM
ஜூலை 19, 2024 09:45

1. சென்னை குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டாயம். ஒப்புதல் பெற்ற, பெறாத, பத்திரம் இல்லாத எல்லா வீடுகளுக்கும் பொருந்தும், என்றால் தவறான மசோதா. இணைப்பு கட்டாயம் என்றால் பாதாள சாக்கடை கட்டாயம். ஒப்புதலுக்கு கால அவகாசம் கட்டாயம். 2. நகராட்சி மாநகராட்சியாக இஷ்டம் போல மாற்ற கூடாது. வரிசை படுத்தி மாற்ற வேண்டும். 1947 முன், பின் சில நகராட்சிகள் இருந்து இருக்கும். உதாரணம் ஸ்ரீ வில்லிபுத்தூர். அவைகளை விட்டுவிட்டு அரசியல், வாக்கு வங்கி காரணமாக புதிய நகராட்சியை மாநகராட்சிக்கு மாற்றி வருகின்றனர். அங்கு அதிக முதலீடு செய்ய வேண்டி வரும். இது உள்நோக்க மசோதா. இதனை நிறுத்த வேண்டும். சட்ட பேரவை ஒரு கட்சி பேரவை. இவை எடுக்கும் முடிவை கவர்னர் பலமுறை விளக்கம் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.


Ramesh Sundram
ஜூலை 19, 2024 06:37

ஆளுநர் மாறி விட்டார்


Priyan Vadanad
ஜூலை 19, 2024 06:23

அதெப்படி நமது ரவியார் உடனுக்குடன் கையெழுத்து போட்டுவிடுகிறார்....


Kasimani Baskaran
ஜூலை 19, 2024 05:50

இவற்றை அமல்ப்படுத்தியவுடன் தமிழகம் உலகிலேயே முதன்மை மாநிலமாகிவிடும். அதன் பின் அளவுகோலையே புதிதாக உறுவாக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ