உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி துணை முதல்வரானால் மக்களுக்கு தீங்குகள் அதிகமாகலாம்

உதயநிதி துணை முதல்வரானால் மக்களுக்கு தீங்குகள் அதிகமாகலாம்

துாத்துக்குடி:துாத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் அளித்த பேட்டி:துாத்துக்குடி மாவட்டத்திற்கு, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், துறைமுகத்தை மேம்படுத்துதல் என மத்திய அரசு மிக வேகமாக வளர்ச்சி பணிகளை செய்வதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியகொடி ஏற்றாததை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.கிருஷ்ணகிரி, கோவையில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்று தர வேண்டும். கோல்கட்டாவில் மருத்துவ மாணவி கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு சென்றுள்ளது.கருணாநிதி நுாற்றாண்டு நாணய வெளியீட்டு விழா அரசியலுக்கு அப்பாற்பட்டது. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என தி.மு.க., அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.அவர் துணை முதல்வராக வருவதால், தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை. அமைச்சர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் மக்களுக்கு செய்து வரும் தீங்குகள் வேண்டுமானால் இரட்டிப்பாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

முருகன் தன்னுடைய தரத்தை குறைக்கக்கூடாது!

உதயநிதி துணை முதல்வராவது குறித்து மத்திய அமைச்சர் முருகனின் கருத்து தவறானது; கண்டனத்துக்குரியது. மத்திய அமைச்சராக இருக்கும் முருகன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகள் முதல்வடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கட்சிக்கும் ஆட்சி நிர்வாகத்துக்கும் எது நல்லது என்பது முதல்வருக்குத் தெரியும். அதன் வழியில் அவர் முடிவெடுப்பார். தேவையில்லாததைப் பேசி, முருகன் தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது. கீதா ஜீவன், சமூக நலத் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை