உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்பதிவின்றி கடைசி நேரத்தில் ஏறினால் வந்தே பாரத்தில் அபராதத்துடன் கட்டணம்

முன்பதிவின்றி கடைசி நேரத்தில் ஏறினால் வந்தே பாரத்தில் அபராதத்துடன் கட்டணம்

சென்னை: 'வந்தே பாரத்' ரயில்கள் புறப்படுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்னதாக, 'புக்கிங்' நிறுத்தப்படுகிறது. கடைசி நேரத்தில் ஏறும் பயணியரிடம் அபராதத்துடன் கட்டணம் வசூலிப்பதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.சென்னை சென்ட்ரல் - மைசூரு, கோவை; எழும்பூர் - திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட எட்டு வழித்தடங்களில், 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது.பயணியர் தேவை கருதி, எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்களில், 16 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்னதாக, இந்த ரயிலுக்கான 'டிக்கெட் புக்கிங்' நிறுத்தப்படுகிறது.இருப்பினும், கூட்ட நெரிசல் இல்லாத வார நாட்களின் போது, சில இருக்கைகள் காலியாக இருக்கின்றன. அந்த இருக்கையில் பயணிக்க, கடைசி நேரத்தில் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அந்த பயணியரிடம் அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, பயணியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:'வந்தே பாரத்' ரயில்களில் அலுவலக நாட்களில் முன்பதிவு போக, சில டிக்கெட்டுகள் காலியாக இருக்கின்றன. கடைசி, 30 நிமிடங்களுக்கு முன், இந்த டிக்கெட்டுகளை கவுன்டர்களிலும், ஆன்லைனிலும் வழங்குவதில்லை.இந்த டிக்கெட்டுகள், வந்தே பாரத் ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன. வழக்கமான கட்டணத்துடன், அபராதத் தொகையும் சேர்த்து, டிக்கெட் வழங்கப்படுகிறது.இது, பயணியருக்கு பாதிப்பை ஏற் படுத்துகிறது. வழக்கமான டிக்கெட் கட்டணத்துடன், குறைந்தபட்சம், 400 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வந்தே பாரத் ரயிலுக்கான விதிமுறைகள் இப்படி தான் இருக்கின்றன. அதில், ரயில்வே வாரியம் தான் மாற்றம் செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

suruthika kamal
பிப் 25, 2025 09:08

தனியார் நிறுவன ரயில் வண்டி இப்படி தான் இருக்கும்.


ameen
பிப் 25, 2025 07:02

மக்களுக்கு சேவை செய்கிற எண்ணம் போய் அரசாங்கமே கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது....


J p
பிப் 24, 2025 21:52

கடைசி நேரத்தில் ஏறுபவர்கள் வித்தவுட் டிக்கட் டாகவே கருதப்படுவார்கள்..ஏன் என்றால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விட வாய்ப்புண்டு. டிடிஆர் பார்பதற்கு முண்பு......


Sasthamani Venkatachalam
பிப் 24, 2025 21:32

ஏன் முப்பது நிமிடங்கள் முன்னதாக முன்பதிவை மூட வேண்டும்? பத்து நிமிடங்கள் முன்னதாக மூடினால் போதுமே. எஞ்சிய நேரத்தில் ஓடிபி மாத்திரம் எடுத்துக் கொண்டு ட்ரெயினில் ஒரு குறிப்பிட்ட கோச்சில் மாத்ரம் ஏறிக்கொண்டு பின் பணம் செலுத்தி இருக்கை கிடைக்க வழி செய்யலாமே.


Ranga mannar
பிப் 23, 2025 20:39

என்ன இது புது ட்ரெண்ட் .விதிமுறைகள் இயற்றும் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்


ஆரூர் ரங்
பிப் 23, 2025 13:29

ஸ்டேஷன் விட்டுக் கிளம்பிய பிறகும் அடுத்த (நிறுத்தம்) ஸ்டேஷனகளில் புக்கிங் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கெல்லாம் புக் செய்தவர்களை நின்று கொண்டு பயணிக்க சொல்ல முடியாது.


Ethiraj
பிப் 23, 2025 12:58

Passengers if they buy unreserved ticket and enter any train only reservation ges being collected not fine Why there is change in norms


Saai Sundharamurthy AVK
பிப் 23, 2025 12:03

கடைசி நேரத்தில் இடம் காலியாக இருந்தால் அதை நிரப்பக் கூடாது. முன்பதிவு ஒன்று தான் ஒரே வழி என்று விட்டு விட வேண்டும். தேவையில்லாமல் காலியாக இருக்கும் இடங்களுக்கு காசு வாங்கி கொண்டு கொடுக்க ஆரம்பித்தால் போட்டி அதிகமாகி விடும். பிறகு முன்பதிவு செய்யாமலே பெட்டியில் ஏறி பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் தான் பயணிகளுக்கு அதிகரிக்கக் கூடும். இந்த மாதிரி எண்ணங்கள் முறையாக முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறுகளைத் தான் தரும். வைகை, பல்லவன் விரைவு ரயில்கள் குட்டி சுவராகிப் போனதற்கு இது தான் காரணம்.


Karthik
பிப் 23, 2025 15:48

சரியாக சொன்னீர்கள். அதுதான் உண்மை..


Karthik
பிப் 23, 2025 16:35

மிகச் சரியாக சொன்னீர்கள். அதுதான் உண்மை.


ES
பிப் 23, 2025 11:37

New ways to loot every day from common people


Sridharan Venkatraman
பிப் 23, 2025 09:38

அப்பா வீட்டு ரயிலா ? அப்படின்னா ஸ்டாலின் வீட்டு ரயிலா என்று அர்த்தம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை