உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகன் மாநாட்டு தீர்மானங்கள் வி.சி., கருத்துக்கு பா.ஜ., கண்டனம்

முருகன் மாநாட்டு தீர்மானங்கள் வி.சி., கருத்துக்கு பா.ஜ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கல்வியை காவி மயமாக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் அதிர்ச்சி அளிப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் கூறியதற்கு, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துஉள்ளார்.ரவிகுமார்: கல்வியை காவி மயமாக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி, அறநிலையத் துறை பள்ளிகள், கல்லுாரிகளில், மாணவ - மாணவியருக்கு போட்டி கள் நடத்தி பரிசுகள் வழங்குவது.விழாக் காலங்களில் முருகன் கோவில்களில், மாணவ -- மாணவியரை கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது; கோவில் சார்பில் நடத்தப்படும் கல்லுாரிகளில், சிறப்பு ஆன்மிக பாடப்பிரிவுகளை ஏற்படுத்த பரிந்துரைப்பது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இது, கல்வியை சமய சார்புடையதாக்குதல் என்னும் பா.ஜ., அரசின் ஹிந்துத்துவ செயல் திட்டத்தை, முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல. ஹிந்து சமய அறநிலையத் துறை, தன் துறை சார்ந்த நடவடிக்கைகளை செய்தால், அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை.ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தை கொண்டு வந்து திணிப்பது, சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்பு சட்ட நெறிக்கு எதிரானது. நாராயணன் திருப்பதி: மதரஸாக்களில் முஸ்லிம் மத போதனைகள்தான் கல்வியாக கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இது ரவிகுமாருக்கு தெரியுமா; அதை விமர்சிக்க தைரியம் உள்ளதா; கிறிஸ்துவத்தை பரப்புவோர் நடத்தும் பள்ளிகளில், பைபிள் குறிப்புகள் இடம்பெறுவது ரவிகுமாருக்கு தெரியுமா? லயோலா கல்லுாரிக்குள் சர்ச் உள்ளது தெரியுமா?கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் தங்கள் கல்லுாரிகளில், மத வழிபாடு நடத்தலாம். ஆனால், பெரும்பான்மை மக்கள் கல்வி கற்கும் கல்விச் சாலைகளில் இறை வழிபாடும், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் கண்டனத்துக்கு உரியதா? கல்வியை, கலாசாரத்தை, பண்பாட்டை, நாகரிகத்தை, ஒழுக்கத்தை, நேர்மையை, நீதியைத்தான் ஹிந்து சமயம் போதிக்கிறது.இப்படி தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுதான் கடும் கண்டனத்துக்கு உரியது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kanns
ஆக 27, 2024 10:02

Isolate Reject & Exile AntiHindus to PakBangla


N Annamalai
ஆக 27, 2024 09:56

சிறுத்தைகள் தேர்தலுக்கு முன் கோவில் என்று காலில் விழுவார்கள் .விபூதி பூசுவார்கள் .தேர்தல் முடிந்தவுடன் இந்து மடத்தை எதிர்ட்பார்கள் .கேலி செய்வார்கள் .அதில் அவர்களுக்கு ஒரு சந்தோசம் .


krishnamurthy
ஆக 27, 2024 08:55

நாராயணன் பதில் சரியான பதிலடி


Sampath Kumar
ஆக 27, 2024 08:39

அவர்களாவது தெளிவாக சொல்லி விட்டார்கள் அனால் உங்க கும்பல் ஏந்த அளவிற்கு குழப்ப முடியமா மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அற்ப புதுமொண்ட அயோக்கிய கும்பல் இது குறித்து பேசேந்த தகுதியும் இல்லை


Mettai* Tamil
ஆக 27, 2024 13:09

நாராயணன் திருப்பதி அவர்கள் தெள்ள தெளிவாக பதிலடி தந்துள்ளார் .....நீங்கள் குழம்ப வேண்டாம் ......


Rajarajan
ஆக 27, 2024 07:01

நாடு சுதந்திரம் வாங்கியபோது, ஹிந்து மதத்துக்கு எதிராகவும், மற்ற மதத்திற்கு ஆதரவாகவும் இயற்றப்பட்ட சட்டத்தை தற்போது கட்டாயம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இல்லையேல், காலப்போக்கில் ஹிந்துக்கள் இந்தியாவிலேயே சிறுபான்மையினராக மாற்றப்படுவது உறுதி.


Svs Yaadum oore
ஆக 27, 2024 06:49

மதரஸாக்களில் மத போதனைகள்தான் கல்வியாக கற்றுக் கொடுக்கப்படுகின்றனவாம் . மதம் மாற்றிகள் நடத்தும் பள்ளிகளில், பைபிள் குறிப்புகள் உள்ளதாம் ....நுங்கம்பாக்கம் கல்லுாரிக்குள் மேய்ப்பர் ஆலயம் உள்ளது ..... ஆனால் கோவில் நடத்தும் பள்ளியில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது கண்டனத்துக்கு உரியதாம் ....இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் கொண்டு வந்த அரசியல் சட்டம் ...அரசியல் சட்டம் ART 28 ன்படி CBSE பள்ளியில் ஹிந்து மதம் பற்றி சொல்லி கொடுக்க கூடாது ....ஆனால் ART 30ன்படி சிறுபான்மை மட்டும் அரசு உதவி பெற்று அவனுங்க நடத்தும் பள்ளியில் அவர்கள் மதத்தை பற்றி சொல்லி கொடுக்கலாம்....இதை மாற்ற மக்கள் ஆதரவு தேவை ...இல்லையென்றால் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தியா முழுக்க மதம் மாற்றத்தை தொடர்வார்கள் ..


sugumar s
ஆக 27, 2024 08:07

true. hindus should wake up and oust those political parties against hindu sentiments


Kasimani Baskaran
ஆக 27, 2024 05:39

ஆன்மீகத்தில் எல்லை கண்ட தமிழகத்தில் இந்துக்கடவுள் மட்டும் மறுப்பு போராளிகள் மட்டும் உலா வருகிறார்கள். இதே கோஷ்டி வேறு மதம் பற்றி பேசவே மாட்டார்கள்.


Vijayakumar
ஆக 27, 2024 02:46

சரியான பதிலடி செருப்படி.


முக்கிய வீடியோ