உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, புறநகரில் 500 இடங்களை சூழ்ந்த மழைநீர்: மருத்துவமனைகளில் வெள்ளம் தேங்கி பாதிப்பு

சென்னை, புறநகரில் 500 இடங்களை சூழ்ந்த மழைநீர்: மருத்துவமனைகளில் வெள்ளம் தேங்கி பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயலின் தாக்கத்தால் நேற்று மாலை வரை சராசரியாக 15 செ.மீ., மழை பெய்தது. நேற்று பெய்த தொடர் கனமழையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என, 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை தரைதளத்தில் உள்ள புறநோயாளி பிரிவில் மழைநீர் புகுந்தது. மேல்தளத்தில் இருந்து, ஐந்தாவது மாடியில் உள்ள, சுக பிரசவத்திற்கு பிந்தைய வார்டுகளிலும் மழைநீர் புகுந்தது.இதனால், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டோர் அவதிப்பட்டனர். பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த அவர்களுக்கு, உடனடியாக மாற்று வார்டு ஒதுக்கப்பட்டது.அதேபோல், அருகே உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் மழைநீர் தேங்கியதால், இரண்டு மருத்துவமனைக்கும் வந்த நோயாளிகள், கர்ப்பிணியர், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளில் மழைநீர் தேங்கியதால், அங்கே கட்டப்பட்டு வரும் தாய் - சேய் நல கட்டடத்திற்கு நோயாளிகள் மாற்றப்பட்டனர்.அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலும் மழைநீர் புகுந்தது. ஆவடி, பெரவள்ளூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் போலீசார் திணறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sriraman Ts
டிச 01, 2024 06:49

சென்னை எழும்பூர் மகளிர் மருத்துவமனையில் புமியிலிருந்தும்,ஆகாயத்திலிலுந்தும் மழை நீர். நோயாளிகள் அவதி. கேவலமான நிலமை. சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணி என்ன செய்கிறார். இவர் ஒருவர் சிறப்பாக செயலாற்றுபவர். ஆனால் இப்போது அவரும் இப்படி.


இறைவி
டிச 01, 2024 06:09

1 / 1 அதிக கன மழையோ ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் அதிகமாகவோ சென்னையில் மழை கொட்டி விடவில்லை. நிதானமாகவே பெய்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான சாலைகள், தரைவழி பாலங்கள் எல்லாம் மழை நேரில் முழுகி உள்ளன. அப்படியானால் 4000 கோடி ரூபாயில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டது எல்லாம் பொய்யா கோபால். இதுதான் யாரும் குறையே சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி. காசுக்கும் குவாட்டருக்கும் வெட்கமில்லாமல் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையிலும், ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்க ஆமாம் சாமி போடும் கட்சிகளை வளைத்து வைத்து இருக்கும் வரையிலும் தீயமுகதான் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரும். மக்கள் எப்போதும் போல சகதியில் உழலும் ஜீவன்களாக சந்தோஷத்தை அனுபவிப்போம். இதுவரை கட்சி சார்பாக காசு கொடுத்தது போக இப்போது அரசு செலவிலேயே மகளிர் உரிமைதொகை என்ற பெயரில் மாதாந்திர காசு கொடுக்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வரி, மின்சார உயர்வு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நம்மிடம் பிடுங்குகிறார்கள். நாமும் பல்லிளித்து ஓட்டு போடுவோம்.


சண்முகம்
டிச 01, 2024 10:13

எதையும் எந்த திராவிட கட்சிகளும் முறையாக, தறமாக மக்கள், மாநில, தேசிய நலன்கருதி செய்யமாட்டார்கள். ஒரே குறிக்கோள் எப்படியாவது ஆட்சியில் தொடரவேண்டும், மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் அதற்க்கு சில கட்சிகளின் கூட்டணி, தேர்தல் நேரத்தில் இலவசம், மக்களுக்கு பணம், குவாட்டர், பிரியாணி இவ்வளவுதான். நாடு முன்னேற மக்கள் திருந்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை