உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிமவள கொள்ளையில் யாருக்கு எவ்வளவு

கனிமவள கொள்ளையில் யாருக்கு எவ்வளவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கனிமவளக் கொள்ளையில் யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் என்றும், அரசு அலுவலர்களுக்கு பணம் வழங்கப்பட்டது குறித்தும் எழுதிய டைரி ஒன்றின் பக்கம் பரவி வருகிறது.விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் ஜன. 28ல் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சாத்துார் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.கனிமவளக் கொள்ளை தடுக்க தவறியதாக சாத்துார் தாசில்தார் உள்ளிட்ட 7 பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.இதில் வேளாண் உதவி அலுவலர் முத்துக்குரு சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது யார் யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய டைரியின் பக்கம் என ஒன்று பரவி வருகிறது. அதில் கிராவல் விற்கப்பட்ட விவரம், கனரக வாகனங்களுக்கு பணம் வழங்கப்பட்ட விபரம், அரசு அலுவலர்களுக்கு பணம் வழங்கப்பட்ட விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.பிப். 16 முதல் சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதில் வெளிப்படை தன்மையோடு டைரி விவகாரத்தின் உண்மை தன்மையையும் கையில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Palanisamy T
பிப் 22, 2025 10:10

தமிழக அரசு இவர்களை உடனே சட்டத்தின் முன்னே நிறுத்தவேண்டும் . மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.


panneer selvam
பிப் 22, 2025 16:32

How Tamilnadu government takes action against the culprits when they themselves are the beneficiary


Palanisamy T
பிப் 22, 2025 10:04

ஊழல் ஊழல் எங்கும் எதிலும் ஊழல். எல்லா மாநிலங்களிலும் ஊழல். அமெரிக்கா ஜப்பான் கொரியா சீனா போன்ற ஊர்களில் ஊழல் செய்தால் என்ன தண்டனையென்று தெரியுமா? இந்த கனிம வள ஊழல் பற்றி முதலமைச்ச்ர அவர்கள் வாய்த் திறப்பாரா?


RAAJ68
பிப் 22, 2025 11:41

SENATOP FAMILY க்கு எவ்வளவு என்பதை தெரிவியுங்கள். மற்றும் ஆழ்வார்பேட்டை கோபாலபுரம் கிழக்கு கடற்கரை சாலை குடும்பங்களுக்கு எவ்வளவு போகிறது என்பதையும் எழுதவும்.


அப்பாவி
பிப் 22, 2025 09:49

என்ன விவரம்னு போடாமலேயே செய்தி...


D.Ambujavalli
பிப் 22, 2025 06:32

நாளைப் பின்னே பிரசினை வந்தால் எதற்கும் இருக்கட்டும் என்று உஷாராக இந்தக் ‘கொடுக்கல் - வாங்கலுக்கு டயரி வைத்துக்கொள்ளும் இந்தக் குவாரிக் கொள்ளைக்காரர்கள் ஊழல் அதிகாரிகளுக்கு சிம்ம சிப்பணமாகி விடுவார்கள் இதே போல் குட்கா கேசில் சுகாதார அமைச்சர், போலீஸ் அதிகாரி எல்லாரும் சம்பந்தப்பட்ட விவரம் வந்தது. ஆனால் இதையெல்லாம் authorized documentaaka எடுத்துக்கொள்ள விடாமல் வக்கீல்கள் செய்துவிடுவார்கள்


சமீபத்திய செய்தி