உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயனாளிகளிடம் ரூ.10 ஆயிரம் வசூல்: தி.மு.க., பெயரில் மிரட்டல்

பயனாளிகளிடம் ரூ.10 ஆயிரம் வசூல்: தி.மு.க., பெயரில் மிரட்டல்

மதுரை:'மதுரை மாநகராட்சி நலத்திட்ட பயனாளியாக்குகிறோம்,' எனக்கூறி, 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியில் குடிசையில் வசிப்போர், நகர்புற ஏழைகள், ரோட்டோரம் வசிப்போர் வாழ்க்கை தரம் உயர, ஜனனி சுரக்ஷா, மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி, சுயவேலைவாய்ப்பு, மகளிர் சுயஉதவிக்குழு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தி.மு.க., ஆட்சியில், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, பயனாளிகள் தேர்வுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின், பணம் கேட்டு சென்றவர்களிடம் தி.மு.க., பிரமுகர்கள் பெயரைக்கூறி மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட காமாட்சியம்மாள் (அனுப்பானடி), போதும்பொண்ணு(காந்திபுரம்), பாண்டியம்மாள்(புதூர்) மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் புகார் செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கமிஷனர் நடராஜன் கூறியதாவது: மாநகராட்சி திட்டங்களில் விண்ணப்பம் வழங்க, பெற பிறருக்கு அனுமதியில்லாத போது, பொதுமக்கள் நம்பி ஏமாறுவது வேதனையளிக்கிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்