உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றாலைகளில் கிடைத்தது 10 கோடி யூனிட் மின்சாரம்

காற்றாலைகளில் கிடைத்தது 10 கோடி யூனிட் மின்சாரம்

சென்னை : தமிழக மின் வாரியத்தின் பகிர்ந்தளிப்பு மைய விபரத்தின்படி தமிழகத்தில் 9019 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றை நுாற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன.மே முதல் செப்., வரை காற்றாலை சீசன்.சீசன் துவங்கியதும் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8-9 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும். இது ஜூன், ஜூலை மாதங்களில் 10 கோடி யூனிட்களை தாண்டும். அதன்படி 2022 ஜூலை 9ல் 12.02 கோடி யூனிட்கள் கிடைத்தன. இதுவே இதுவரைகாற்றாலை மின்சாரத்தில் கிடைத்த உச்ச அளவு.கடந்த ஆண்டில் அதிக அளவாக ஜூலை 4ல், 11.71 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. இம்மாதம் காற்றாலை சீசன் துவங்கிய நிலையில் சில தினங்களாக 9 கோடி யூனிட் மேல் கிடைத்தது. நேற்று முன்தினம் 10.27 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. மே மாதத்தில் காற்றாலைகளில், 10 கோடி யூனிட் கிடைப்பது முதல்முறையாகும்.இதுகுறித்து தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்காடசலம் கூறுகையில், “காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. விலை மிகவும் குறைவு. இந்த சீசனில் காற்றாலைகளில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கிறதோ, அதை மின் வாரியம் முழுதுமாக பயன்படுத்த வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ