உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குப்பைக்கு போன 1,000 மனுக்கள்; பி.ஏ., மூலம் டீல் பேசும் அமைச்சர்கள்

குப்பைக்கு போன 1,000 மனுக்கள்; பி.ஏ., மூலம் டீல் பேசும் அமைச்சர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: 'எம்.எல்.ஏ.,க்களது குறைந்தபட்ச உரிமையை, மரியாதையை காப்போம்' என, சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஆறு பக்கக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:

மக்களது பொதுவான கோரிக்கைகளை சட்டசபை கேள்விகளாக, 20,000த்துக்கும் மேல் கொடுத்துள்ளேன். இதையே நீங்களும், உங்கள் பாணியில் சிறப்பாக செய்து இருப்பீர்கள்.நான் எழுதும் கீழ்க்கண்ட கருத்துகள், அனைவரையும் அரவணைத்து பாராட்டும்படி செயல்படும் நான்கு அமைச்சர்கள் தவிர்த்து, மீதம் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் பொருந்தும்.மக்களது கோரிக்கைகள், அவர்களில் சிலரது தனிப்பட்ட தேவைகளுக்காக, அமைச்சர்களை நேரில் சந்திக்கிறோம். 'காபி சாப்பிட்டியா? என்னோடு நீ டிபன் சாப்பிட்டே ஆக வேண்டும்' என, அன்பொழுக பேசி சாப்பிட்டு முடித்து, அண்ணா ஒரு வேலை என்றால்... 'கொடு... ஏ... பி.ஏ., இத உடனே செய்து கொடு' எனும்போது, நமது காதில் தேன் பாயும் மகிழ்ச்சி.நான் கொடுத்த ஏதும் இதுநாள் வரை நடக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது நடந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.சில அமைச்சர்களிடம், நாம் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் பரிந்துரைக்கு நேரடியாக யாருக்காக பரிந்துரைக்கிறோமோ, அவர்களிடமே அமைச்சர்களது உதவியாளர்கள் மூலம் பேசி, 'டீல்' செய்து, எம்.எல்.ஏ.,வான நம்மை அவமானப்படுத்திய நிகழ்வு, மதுரையைச் சேர்ந்த பத்திரமானவர் உள்ளிட்ட பலரால் எனக்கு ஏற்பட்டது.இன்னும் சில அமைச்சர்கள், நாம் கொடுக்கும் மனுவை தொட்டாலோ, படித்தாலோ தீட்டு என்பதுபோல பாவிக்கும் விதம்... பாடம் சொல்லும் அமைச்சர் உள்ளிட்ட சிலரிடம் எனக்கு ஏற்பட்டது.இதுவரை என் தொகுதி சார்ந்தும், மக்களின் தனிப்பட்ட பிரச்னைகள், தேவைக்களுக்காகவும், 1,000க்கும் மேற்பட்ட மனுக்களை, அமைச்சர்களிடம் நேரில் கொடுத்துள்ளேன். இதன் அனைத்து நகல்களும் என்னிடம் உள்ளன.அதில், 9 கோரிக்கைகள் நிறைவேறி, மீதமுள்ள மனுக்கள் குப்பைக்கு போய் விட்டனவா அல்லது தனிப்பட்ட டீலுக்காக காத்திருக்கிறதா என்பது அமைச்சர்களுக்கே வெளிச்சம். போட்டி போட்டு, 12 முதல், 18 வரை வாங்குறாங்க. குறைத்துக் கொள்ளுங்கண்ணா என்றால், மேல கை காட்டுறாங்க. இவைகளை எல்லாம் ஏன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், உங்கள் மாவட்ட அமைச்சர், உங்களுக்கு நெருக்கமானவராக இருக்கலாம். அவரும் நம்மைப்போல, எம்.எல்.ஏ.,வாகி பின்னரே அமைச்சரானார் என, அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். இன்றைய அமைச்சர் நாளையே வெறும் எம்.எல்.ஏ., ஆகலாம். அவருக்கும் நம் நிலை ஏற்படக் கூடாது என, எடுத்துச் சொல்லுங்கள்.அமைச்சர்கள், நமக்கு தரும் மரியாதை இதுதான் என்றால், அதிகாரிகள் தரும் மரியாதை மிக சிறப்பு. நல்ல பல அதிகாரிகளுக்கு மத்தியில், சிலரே நம்மை சந்திக்க மறுக்கிறார்கள். இதுதான் இன்றைய மக்களாட்சி. நமக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு, 5 ஆண்டுகளில் ஏதேனும் செய்து கொடுத்தால் தானே மீண்டும் அவர்களது முகத்தில் விழிக்க முடியும். தேர்தலில் நாம் செய்த செலவுகள், அதனால் நமக்கு ஏற்பட்ட கடன்கள் குறித்து, இங்கு நான் ஏதும் குறிப்பிட விரும்பவில்லை. என் மனதில் இருக்கும், இதுபோன்று இன்னும் பல வேதனைகளை பெரும்பாலான உங்களுக்கும் இருக்கும் என்பதை நான் அறிவேன். அப்படி இல்லை என்றால், நீங்கள் ஆளுங் கட்சி மாவட்ட செயலராக இருப்பீர்கள்.இந்த கூட்டத் தொடரில் பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் முதல்வரிடம் முறையிட்டு, நமக்கு அமைச்சர்களால் ஏற்படும் புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் எடுத்துரையுங்கள். நேரில் சொல்ல முடியாவிட்டால், முதல்வருக்கு கடிதமாவது கொடுங்கள். 234 எம்.எல்.ஏ.,க்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்பதை, அமைச்சர்களுக்கு, முதல்வர் மூலமாக உணர்த்துவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.கடிதம் குறித்து எம்.எல்.ஏ. அருளிடம் கேட்டபோது, ''எம்.எல்.ஏ.க்களை, தி.மு.க. அரசு, அமைச்சர்கள் எல்லாரும் கேவலப்படுத்துகின்றனர். உரிமைகளை புறக்கணிப்பதால் மரியாதை வேண்டும் என்பதற்காக, இதை மனக்குமுறலாக, கடிதமாக எழுதி அனுப்பியுள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

S. Kalaiselvan
ஜூன் 16, 2024 08:15

ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி தரும் இந்த அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவையுடன் தர வேண்டும் என்ற மாண்புமிகு உச்சநீதி நீதி மன்றம், மாண்புமிகு உயர்நீதி மன்றம் சொல்லியும் பொய் காரணம் சொல்லி தராத இந்த அரசு விரைவில் வீழும். எங்கள் சாபம் சும்மா விடாது.


Bhaskaran
ஜூன் 16, 2024 08:01

மனுக்கள் சேவுக்கடைக்கு போகும் அல்லது மிக அதிகமாக இருந்தால் பேப்பர் மில் லுக்கு அரசவைக்கு போகும்


Rajarajan
ஜூன் 15, 2024 12:30

துப்புனா தொடச்சிக்குவோம் பாலிசி.


Ramesh Sargam
ஜூன் 15, 2024 11:55

எம் எல் ஏ க்களுக்கே இந்த கதி என்றால், சாமானிய மனிதனின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.


V RAMASWAMY
ஜூன் 15, 2024 09:56

Yes, they are dealers, then what else they come to power,


Rajarajan
ஜூன் 15, 2024 08:27

எத்தனை முறை மனுக்கள் அனுப்பினாலும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தவிர, வெறும் ஒன்றும் நடக்காது. அது இருக்கட்டும். ஒரு முறை, ஒரு முதல்வர் கூறினார். இந்த மஞ்சள் அட்டையை, தலைமை செயலகத்தில் காட்டினால், யாரும் தடுக்க மாட்டார்கள், நேரே என்னை வந்து சந்திக்கலாம் என்றார். அப்படி எத்தனை பேர், எத்தனை முறை, அந்த அட்டையை காட்டி சந்தித்தனர் என்ற புள்ளி விவரம் உண்டா ? இன்னுமா இந்த ஊரு அவங்கள நம்புது ? அது அவங்க விதி.


Svs Yaadum oore
ஜூன் 15, 2024 07:51

எம் எல் ஏ மனுக்களுக்கே இந்த நிலைமை ....பரந்தூர் ஏகனாபுரம் கிராம மக்கள் 600 நாட்களாக போராட்டம் ...ஆனால் அது எதையும் காதில் வாங்காமல் இந்த விடியல் அரசு அடுத்தடுத்து பரந்தூர் விமான நிலையம் நில ஆர்ஜிதம் அரசாணை வெளியிடுது ..காரணம் விடியல் ரியல் எஸ்டேட் பெரும் பண முதலைகள் ..கிராம மக்களை அழைத்து பேசக்கூட இங்கு நாதியில்லை ..எடப்பாடி ஆட்சியில் எட்டு வழி சாலை என்று கூவின எந்த செய்தி தொலைக்காட்சி என்று எவனும் இப்போது வாய் திறக்கவில்லை ..காரணம் அறிந்ததே ..இதுதான் நடு நிலை தொலைக்காட்சி நெறி ....40க்கும் 40பது வெற்றி ...அதிகார போதை ....விடியல் ஆட்சி மக்களுக்கு பெருத்த விடியல்....


Svs Yaadum oore
ஜூன் 15, 2024 07:41

ஏழைகள் பேச்சு துயரம் கோரிக்கை மனு எதுவும் அம்பலம் ஏறாது ... மாஞ்சோலை எஸ்டேட்ட்டில் என்ன நடக்குது என்று விடியலுக்கு தெரியுமா?? ...இதில் பெரிய ராமசாமி சமூக நீதி சமத்துவ மத சார்பின்மையாம் ...அந்த எஸ்டேட் மேல் இங்குள்ள ரியல் எஸ்டேட் கங்காணிகளுக்கு கொள்ளை அடிக்க காத்திருப்பு .... .மாஞ்சோலை மலையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வந்த, 7,000 மக்கள் அடுத்து என்ன செய்வது என, புரியாமல் தத்தளித்து வருகின்றனர்.... ஐந்து தலைமுறையாக மலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் காலி செய்து வெளியேற சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள்?? ...ஏழை மக்கள் என்றால் விடியலுக்கு கிள்ளு கீரையா?? .....இது பற்றி இங்குள்ள பத்திரிகை தொலை காட்சிகள் எதுவும் செய்தி வராது .....காரணம் அறிந்ததே ....


R.RAMACHANDRAN
ஜூன் 15, 2024 07:11

இந்த நாட்டில் மனுக்கள் நேரில் கொடுப்பது இணைய வழியில் பதிவு செய்வது எல்லாம் பிரதமர் குடியரசு தலைவர் ஆகியோர்க்கு அழிப்பது உட்பட லஞ்சம் இன்றி சேவை இல்லை என கொள்கையில் உறுதியாக இருப்பவர்களால் குப்பை கூடைகளுக்கு அனுப்பப்படுகின்றன சட்ட மன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் கட்சிக்காரர்களுக்காக மனுக்கள் அளிப்பர்.பொது நன்மைக்காக எதையும் செய்ய மாட்டார்கள் ஆதாயம் இன்றி.


duruvasar
ஜூன் 15, 2024 06:53

இதுதான் டா திராவிட மாடல். அறிந்தவன் வாயில புண்ணு, அறியாதவன் வாயில மண்ணு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை