உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,000 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கம்

1,000 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கம்

சென்னை:விநாயகர் சதுர்த்தி கொண்டாட, ென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பண்டிகை மற்றும் விடுமுறை முடிந்துள்ளதால், இன்று மாலை முதல் பயணியர் தங்களது பணியிடங்களுக்கு திரும்புவர். எனவே, பயணியரின் தேவைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக, இன்று மதியம் முதல் சென்னை, மதுரை, கோவை, திருப்பூருக்கு, 1,000க் கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ