உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 10ம் வகுப்பு ரிசல்ட்

நாளை 10ம் வகுப்பு ரிசல்ட்

சென்னை:அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை காலை 9:30 மணிக்கு, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் தெரிந்து கொள்ளலாம்.தேர்வு முடிவை, www.tnresults.nic.in/, www.dge.tn.gov.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் விபரம் பெறலாம். மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த மொபைல்போன் எண்ணுக்கும், மதிப்பெண் விபரம் எஸ்.எம்.எஸ்.,சாக அனுப்பப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ