உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 16 ஐ.பி.எஸ்.,கள் அதிரடியாக.. இடமாற்றம்!

16 ஐ.பி.எஸ்.,கள் அதிரடியாக.. இடமாற்றம்!

தமிழக காவல் துறையில் பணிபுரியும், 16 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நேற்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து, 46 நாட்களில், 41 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பதவி மாறி உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதி களில், ஜூன் 19ல் கள்ளச்சாராயம் குடித்து, 225 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 64 பேர் பலியாகினர். இதற்கு கள்ளச்சாராயத்திற்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பதில் காட்டிய அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. நாளுக்கு நாள் உயிர் பலிகளும் அதிகரித்து வந்ததால் நிலைமை மோசமானது.

கூடுதல் பொறுப்பு

அப்போது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமயசிங் மீனாவும் மாற்றப்பட்டார்.அத்துடன், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த அருணுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக இருந்த கோபி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தையொட்டி துவங்கப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணியிட மாற்ற விவகாரம் தற்போது வரை தொடர்கிறது.இதற்கிடையில், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இது, காவல் துறை மீது மேலும் ஒரு புயலை கிளப்பியது. தேசிய கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை; தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்ற நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.

கமிஷனர் மாற்றம்

இதனால், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த, டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய போலீஸ் கமிஷனராக மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த அருண் நியமிக்கப்பட்டார்.தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநில சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், ஆயுதப்படையில் நியமிக்கப்பட்டார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., வெங்கட்ராமன், சென்னை மாநகர போலீசில் கூடுதல் கமிஷனர்களாக பணிபுரிந்த அஸ்ரா கார்க், பிரேம் ஆனந்த் சின்கா உட்பட, 18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர். நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ், திருநெல்வேலி கமிஷனர் மூர்த்தி உட்பட, 16 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.இப்படி மாநிலம் முழுதும், 46 நாட்களில், 41 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பதவி மாறி உள்ளனர். இதேபோல, ஒன்றரை மாதங்களில், 95 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

திண்டுக்கல் சரவணன்
ஆக 05, 2024 15:32

பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்


enkeyem
ஆக 05, 2024 15:25

திராவிட மாடல் ஆட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ, அரசு அதிகாரிகள் டிரான்ஸ்பர் மட்டும் ஜரூராக நடக்கிறது. ஆனால் இந்த ட்ரான்ஸ்பார்களால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை


Narayanan
ஆக 05, 2024 15:20

ஒவ்வொரு மாற்றத்திற்கும் பணம் பண்ணுவதாக சொல்லப்படுகிறது இது உண்மைதான் போல் இருக்கிறது. அதிகாரிகள் மாற்றம் ஏன் ? அதுவும் நிறைய நடக்கிறது .


skv srinivasankrishnaveni
ஆக 05, 2024 11:14

சி எம் ரொம்பவே சுறுசுறுப்பாக இருக்காங்க அதன் பலனே ips ias அதிகாரிகளின் இடமாற்றம் இதுதான் சந்தர்ப்பம் நல்ல எல்லா இடங்களையும் பார்த்து என்ஜாய் pannavam


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 05, 2024 10:29

போதைப் பொருட்கள் கடத்தலில் திமுகவினர் முனைப்புடன் அங்கிங்கெனாதபடி தமிழகம் முழுவதும் பரவி துடிப்புடன் செயலாற்றுவதை மக்கள் மறக்கும் வரை அதிகாரிகளின் இட மாறுதல் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும். கள்ளக்குறிச்சி இன்று எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது?


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 05, 2024 10:27

ஜெயா ஆட்சி காலத்தில் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்த போது திமுகவினர் கொந்தளித்து கொப்பளித்த வார்த்தைகளை மறு வெளியீடு செய்யலாமே


அப்பாவி
ஆக 05, 2024 09:46

இனிமே சட்டம். ஒழுங்கு சீராயிடும் ஹை. அப்படி சீராகலேன்னா திரிப்பி மாத்தல் போட்டு அதிரடி காட்டுவோம் ஹை. அப்பவும் சீராகலேன்னா அடுத்த மாத்தல் வரும்.ஹை. இப்பிடியே ஓட்டிருவோம் ஹை.


sridhar
ஆக 05, 2024 07:12

தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் அதிகாரிகள் மட்டுமே காரணம், திமுக அரசு அல்ல .


lana
ஆக 05, 2024 07:02

இதுக்கு பருத்தி மூட்டை godown இலேயே இருக்கலாம்


Kasimani Baskaran
ஆக 05, 2024 05:54

ஒரு அதிகாரி நிலையாக இருக்கும் பொழுது கொஞ்சநஞ்ச வேலை நடந்தாலும் அதிகாரிகளை அடிக்கடி மாற்றினால் அதுவும் கூட நடக்காது. பொதுமக்களுக்குத்தான் சிக்கல்.


Narayanan
ஆக 05, 2024 15:25

அதிகாரிகள் இட மாற்றத்தின் போது பண பரிவர்த்தனை நன்றாக நடக்கிறதோ . அமைச்சர்களே வேலை செய்யாத போது அதிகாரிகள் வேலை செய்து பேர் வாங்குவது ஆட்சிக்கு பிடிக்கவில்லை .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை