உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 14ஐ மணந்த 16 வயது சிறுவன்; சமூக வலைதளத்தால் விபரீதம்

14ஐ மணந்த 16 வயது சிறுவன்; சமூக வலைதளத்தால் விபரீதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: திருப்பூர் மாவட்டம், ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தாத்தா உடன் வசித்து வந்தார்.இவர், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளம் வாயிலாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, 2024ம் ஆண்டு, பிப்., 14ம் தேதி காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளார். அங்கு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.அதைத் தொடர்ந்து, தன் தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவல் சிறுமிக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மார்ச் மாதம் தாத்தாவை பார்க்க சிறுமி, திருப்பூர் சென்றுள்ளார். அப்போது, சிறுமிக்கு திருமணமானது தெரியவந்தது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் அளித்த புகாரின்படி, திருப்பூர் மாவட்ட மகளிர் காவல் நிலைய போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பூரில் இது சம்பந்தமான விசாரணை முடிந்து, இவ்வழக்கை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். காஞ்சிபுரத்தில் திருமணம் நடந்ததால், இவ்வழக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
மார் 02, 2025 10:25

சட்டப்படி திருமணம் செல்லாது ..... சமூகத்தின் பார்வையிலும் தப்புதான் ..... ஆனால் சட்டம் இந்த நவடிக்கையின் மூலம் இருவரது எதிர்காலத்தையும் பாழாக்கிவிட்டது ......


நிக்கோல்தாம்சன்
மார் 02, 2025 09:59

நமது சட்டத்தை சொல்வதா இல்லை விபரீதத்தின் மேல் பழியை போட்டு செல்வதா ? கடும் மனஉளைச்சலுக்கு ஆளானது அந்த தாத்தா மட்டுமே , வழிநடத்த வேண்டிய சட்டம் வழி தவறி போயுள்ளது


தத்வமசி
மார் 02, 2025 09:44

இதில் என்ன போக்சோ ? இருவரும் மனம் விட்டு மணந்து கொண்டுள்ளனர். பெண்ணுக்கு துணை இல்லை. இவர்கள் தப்பு தண்டா செய்ததாக தெரியவில்லை. இவர்களை போக்சோவில் கைது செய்யாமல் வேறு வழியில் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்க்காமல் தகுந்த வயது வந்தவுடன் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ்க்கையை நடத்த எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
மார் 04, 2025 08:26

உண்மைதான் யோசிக்க தெரியாத அரசு பணியாளர்கள்


அப்பாவி
மார் 02, 2025 09:28

அஷ்டா வர்ஷேத் பலேத் கன்யா ஹா ங்கறது உபநிஷத். தாய் தந்தையரை இழந்த அந்த சிறுமிக்கு பாதுகாப்புக்கு எந்த போலீசும் உத்தரவாதம் குடுக்காது. கேஸ் போட மட்டும் வந்துரும்.


Kasimani Baskaran
மார் 02, 2025 07:06

போலீஸ், கோர்ட், வழக்கு என்று முடிவதற்குள் இவர்கள் கிழவன், கிழவி ஆகிவிடுவார்கள்.


kumar
மார் 02, 2025 07:26

18 age ல் விடுதலை ஆகி வந்துடுவாங்க.. ஆனால் எந்த மாதிரியான மனநிலையில் வருவாங்கனு தான் தெரியாது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை