உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1.60 லட்சம் கன அடி நீர்வரத்து; ஒகேனக்கல் வெள்ளக்காடானது

1.60 லட்சம் கன அடி நீர்வரத்து; ஒகேனக்கல் வெள்ளக்காடானது

ஒகேனக்கல் : தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகவின் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.நேற்று கபினி அணையிலிருந்து, விநாடிக்கு, 35,000 கன அடி; கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 1,30,867 கன அடி என, 1,65,867 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.இதனால் தமிழக எல்லையான பிகுண்டுலுவில் நேற்று மாலை, 1.60 கன அடி நீர் வரத்தானது.இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடுகிறது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.கரையோர, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 13வது நாளாக நேற்றும் காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்ந்தது.இதையறியாமல் ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலா பயணியரை, மடம் செக்போஸ்டிலேயே தடுத்து, போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Narayanan Muthu
ஜூலை 29, 2024 13:21

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் ஒகேனக்கல் நீர்வரத்தும் கண்டு சங்கிகள் அரசியல் செய்யமுடியாத ஆதங்கத்தில் காண்டாகி உள்ளனர் என்பது மட்டும் தெள்ள தெளிவாக தெரிகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 14:46

குறுவை சாகுபடி நீரின்றி நிறுத்தப் பட்டுவிட்டது. ஒரு மாதமாக INDI கூட்டாளி நீர் தராமல் இருந்ததால் விவசாயிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டம். மணலை திருட இடைஞ்சலாக இருக்கும் என்று நீரைத் திறந்துவிட வேண்டாமுன்னு இங்குள்ள நேருமையானவர் சொல்லியிருப்பார்.


sethu
ஜூலை 29, 2024 15:21

ஆதிக்கப்படியான இந்த தண்ணீரை தேக்கி வைக்க ஒரு விங்ஹான ஐடியா சொல்லுங்கண்ணே 28 ஆயிரம் சர்க்கரை மூட்டையை எறும்பு தின்ன கதையெல்லாம் சொல்லப்படாது


Ramesh Sargam
ஜூலை 29, 2024 12:20

மழைக்காலங்களில் இப்படி வெள்ளநீரை தமிழகத்துக்கு கொடுத்து தமிழகத்தை வெள்ளக்காடாக செய்வார்கள் கர்நாடக அரசு. ஆனால் வறண்டகாலத்தில் குடிக்க தண்ணீர் கேட்டால் கொடுக்கமாட்டார்கள். இந்த மாதிரி மழை காலத்தில் தமிழக அரசு அந்த நீரை சேமிக்க ஒரு சில அணைகள் கட்டி உபரி நீரை சேமிக்க மாட்டார்கள். ஆனால் ஒன்றுக்கும் உதவாதவர்களுக்கு சிலை வைப்பார்கள்.


sridhar
ஜூலை 29, 2024 10:50

தண்ணீர் தேவைக்கு கிடையாது, அங்கே வெள்ளம் வரும்போது இங்கே விடுவார்கள், நீர் கொடுத்ததாக கணக்கு காட்டுவார்கள் .


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:13

டெல்டா நிலவளம் குறைந்து விட்டதால் அதிக செயற்கை உரங்களை இட்டு தானியங்களின் தரம் பாதிக்கப்படுகிறது. உரத்துக்கு மானியம் அளிக்கும் செலவைவிட அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை இயன்றவரை அகற்றி விவசாயிகளுக்கு அரசே அளிக்கும் செலவு குறைவாகவே இருக்கும். அதிக உரங்கள் தேவைப்படும் வீரிய விதைப்பயிர்கள் அதிக நீர்த் தேவை உள்ளவை. அணையின் கொள்ளளவை மீட்க தூர் வார இயலாது என்றால் அரசே அதனை விவசாயிகளிடம் ஒப்புக் கொள்ளலாம். பிறகு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் எனும் ஊரை ஏமாற்றும் சட்டத்தை திரும்பப் பெறலாம்.


தத்வமசி
ஜூலை 29, 2024 10:12

கவலைப் படவே வேண்டாம். அப்படியே ஓடி வரட்டும். தஞ்சை தாண்டியதும் மிகப் பெரிய கடல் இருக்கிறது. அதில் தேக்கிக் கொள்கிறோம்.


N.Purushothaman
ஜூலை 29, 2024 09:58

அதீத மழையால் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை வரவேற்க பூ தட்டுக்களுடன் சென்ற மாடல் தான் திராவிட மாடல் ....


Dharmavaan
ஜூலை 29, 2024 09:02

மேட்டூர் நிறைந்ததா இல்லையா


sridhar
ஜூலை 29, 2024 10:51

கோட்டூர் நிறையும் ..


பேசும் தமிழன்
ஜூலை 29, 2024 09:00

கர்நாடகா.... காவிரி நீரை நடுவர் மன்ற தீர்ப்பின் படி.... உரிய நேரத்தில் கொடுக்காமல்... அணை நிரம்பும் போது வடிகாலாக மட்டுமெ தமிழகத்தை பயன்படுத்தி வருகின்றனர்... இது தமிழக மக்கள் அனைவரது நிலைப்பாடு... இந்தி கூட்டணி உடைந்தாலும் பரவாயில்லை என்று கான் கிராஸ் கட்சி ஆளும் கர்நாடகா மாநில அரசுடன் சண்டையிட்டு.... காவிரியில் தண்ணீர் பெற்று தந்த தானை தலைவர் நம் விடியல் தலைவர்.... இப்படிக்கு உ.பி ஸ்


BALAJI Ramanathan
ஜூலை 29, 2024 09:39

தமிழ்நாடு முதலமைச்சர் அவ்வாறு செயல்பட வாய்ப்பு இல்லை. கூட்டணிகட்சிகள் சரி இல்லை. இது நம்ம தமிழ்நாட்டின் தலையெழுத்து.


ديفيد رافائيل
ஜூலை 29, 2024 10:00

டம் overflow ஆகுறப்ப தமிழ் நாட்டுல இருக்குறவங்க dam ஐ திறக்க அனுமதிக்க கூடாது. அந்த மாதிரி பண்ணா தான் கர்நாடக திருந்த வாய்ப்புண்டு.


N.Purushothaman
ஜூலை 29, 2024 14:21

பாஸ் ...அணை நிரம்பும் முன்னரே வெளிவட்ட கால்வாய் வழியாகவும் அணைக்கு உள்ளே வரும் நீரின் அளவை மதகு வழியாக குறைத்து கொள்ளளவிற்கு ஏற்றார் போல நீரை அணைக்குள் விடுவது தான் அணையின் கோட்பாடு .... தமிழகத்தை பொறுத்தவரை மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை தென் அல்லது வட மாவட்டங்களுடன் உள்ள அணைகளுடன் இணைந்திருந்தால் தமிழகம் முழுவதுவும் நீர் தட்டுப்பாடு என்பது இருக்க வாய்ப்பே இல்லை ... கால்வாய் மூலம் நீரை எடுத்து செல்வது சவாலாக இருந்தால் குழாய் மூலம் எடுத்து செல்ல திட்டம் தீட்டி இருக்கலாம் ...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை