உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீ வெங்கட பிரியா, உள்துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.பள்ளிக்கல்வித் துறை சிறப்பு செயலர் ஜெயந்தி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பள்ளிக்கல்வித் துறை சிறப்பு செயலர் பொறுப்பை, கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். ஏற்கனவே, உள்துறை கூடுதல் செயலராக, சங்கர்லால் குமாவத்தை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தலைமை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ