உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் வழங்க 20,000 டன் பருப்பு

ரேஷனில் வழங்க 20,000 டன் பருப்பு

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ கனடா மஞ்சள் பருப்பு, 30 ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இவற்றை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. ரேஷனில் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.தற்போது, 20,000 டன் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் பருப்பு; 2 கோடி எண்ணிக்கையில் ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட் வாங்கும் பணியில் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ