உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோ மீது சரிந்த 25 அடி உயர உதயநிதி படத்துடன் கட் அவுட்: காயத்துடன் தப்பிய டிரைவர்

ஆட்டோ மீது சரிந்த 25 அடி உயர உதயநிதி படத்துடன் கட் அவுட்: காயத்துடன் தப்பிய டிரைவர்

திருவள்ளூர்: திருவள்ளுரில் மத்திய அரசை கண்டித்து, துணை முதல்வர் உதயநிதி படத்துடன் வைக்கப்பட்ட 25 அடி உயர கட்அவுட் ஆட்டோ மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் இன்று( மார்ச் 12) கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eh4ad6ex&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்துக்கு வரும் ஸ்டாலின், உதயநிதியை வரவேற்கும் விதமாக, திருவள்ளூர் மாவட்ட எல்லையான அரண்வாயல் முதல் கூட்டம் நடக்கும் திருப்பாச்சூர் வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு புறமும் கம்பங்களை நட்டு தி.மு.க., கொடியை நிர்வாகிகள் கட்டி வருகின்றனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருப்பாச்சூர் வரை 25 அடி உயரத்தில் 5 ராட்சத கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.நேற்று பலத்த காற்று மழை பெய்தது. அப்போது, அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது, துணை முதல்வர் உதயநிதி படத்துடன் வைக்கப்பட்ட 25 அடி உயர கட்அவுட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுனர் லேசான காயம் ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளன.பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளை வைக்கக்கூடாது என்று பலமுறை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளன. ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினர், தங்கள் விருப்பத்துக்கு கட் அவுட் வைப்பது தொடர்கிறது.அரசு அதிகாரிகளும், கண்டும் காணாமல் இருக்கின்றனர். கட்அவுட் காரணமாக விபத்தும் நடந்து வருகிறது. அப்படி இருந்தும், சட்டவிரோதமாக கட் அவுட் வைக்கப்படுவதும், ஆளும் கட்சியினரே அதை முன்னின்று செய்வதும், அதை அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Indian-இந்தியன்
மார் 13, 2025 12:55

கட்ட அவுட் போலவே அவனும் சரிவான - கூடியசீக்கிரமே ......


ப.சாமி
மார் 13, 2025 08:22

நீதிமன்றத்திற்கு அந்த வளாகம் வரை தான் அதிகாரம் உண்டு.ஆனால் அரசியல் வாதிகளுக்கு எல்லையில்லா வானளாவிய அதிகாரம் உண்டு.


orange தமிழன்
மார் 13, 2025 07:26

நல்ல சகுனம்.....


Karthik
மார் 12, 2025 22:40

கட் அவுட் விழுந்து விபத்து நடக்க காரணமான வருண பகவானையும், வாயு பகவானையும் காவல்துறையினர் 24 மணிநேரத்தில் கைது செய்ய இந்த அரசு ஆணையிடுகிறது.அதேநேரம் கோர்ட் மூலம் பிடி வாரன்ட்டும் பிறப்பிக்கப்படும். மேலும் கட் அவுட் விழுந்த இடத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை உறுதி செய்யப்படும். இது உலகுக்கே மாடல் ஆட்சி.


sridhar
மார் 12, 2025 20:59

உதயநிதி கட் அவுட் விழுந்தது ஒரு symbolism தான் .


நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 20:52

ஏழைகளை சாவடிக்க என்றே ஒரு கூட்டம் தமிழகத்தில் உண்டு அதற்கு பெயர் ?


Raghavan
மார் 12, 2025 19:32

கிராமத்தில் ஒரு சொல்லடை உண்டு - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று. கோர்ட் சொன்னால் நாங்கள் எப்போது கேட்டுஇருக்கிறோம். அங்கு உள்ளவர்கள் எல்லாம் நாங்கள் போட்ட பிச்சையில் இருப்பவர்கள் தானே என்கிற ஒரு மமதை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதெல்லாம் ஏட்டுடன் சரி. காற்றோடு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. அதை நாங்கள் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று சொல்லாமல் செயலில் செய்பவர்கள்.


கோபாலன்
மார் 12, 2025 18:53

தமிழ்நாட்டின் மீது ஏவி விடப்பட்டுள்ள கொலைவெறி தாக்குதல். ஜிஎஸ்டி கட்டி வாங்கிய பொருட்களை கொண்டு செய்த பேனரை விழ செய்து ஒன்றிய அரசு தாக்குதல் நடத்தினால் உதயநிதி மக்களை காத்து கொண்டு தான் இருப்பார். விழுந்து பேனருக்கு ஒன்றிய அரசிடம் இருந்து நஷ்ட ஈடு பெற குழு அமைக்கப்படும்


SRITHAR MADHAVAN
மார் 12, 2025 17:27

மேடம் கட்அவுட்டுக்கு பரிகாரம் செய்ய கோயில்களுக்குச் செல்வார்கள்.


RAVINDRAN.G
மார் 12, 2025 17:25

2026 ரிசல்ட் இப்போவே சொன்ன இயற்கைக்கு நன்றி. திமுக இந்த குடும்பம் தவிர யார் வேணாலும் ஆட்சிக்கு வாங்க . நாடு ஓரளவாவது உருப்படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை