உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில் 26,000 ரவுடிகள்

546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில் 26,000 ரவுடிகள்

சென்னை: தமிழகத்தில், 546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில், 26,432 ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், சமீபகாலமாக ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, காவல் துறையில் ஏற்கனவே உள்ள, ரவுடிகளின் பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.புதிதாக தலைதுாக்கி உள்ள ரவுடிகள், அவர்களின் சுய விபரம், புகைப்படம், வழக்கு விபரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. கொடூர குற்றங்களில் ஈடுபடும், 'ஏ பிளஸ்' வகை ரவுடிகள், 421 பேர் உள்ளனர். கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் குற்றங்களில் ஈடுபடும், 'ஏ' பிரிவு ரவுடிகள், 836 பேர் உள்ளனர்.அதேபோல, கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பு என, அட்டூழியம் செய்யும் ரவுடிகளுக்கான, 'பி' பிரிவில், 6,398 பேர் உள்ளனர். அடிதடி, வீண் தகராறு, கலவரத்தை துாண்டி விடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும், 'சி' பிரிவு ரவுடிகள், 18,807 பேர் உள்ளனர்.மாநிலம் முழுதும், 'ஏ பிளஸ் முதல் சி' பிரிவு வரை உள்ள, 26,432 ரவுடிகள், 546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ரவுடிகளை ஒழிக்க, அவர்களின் சமூக விரோத செயலை கட்டுப்படுத்த, 546 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது செயலில் உள்ள ரவுடிகள், தொழிலை விட்டு வெளியேறிய ரவுடிகள், தாதாக்கள், அவர்களை பழி வாங்க துடிக்கும் ரவுடிகளை, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். அவர்களின் சொத்து விபரங்கள், வருமானம் குறித்து விசாரிக்கவும் மண்டல வாரியாக போலீசாரை நியமித்துள்ளோம். சிறையில் உள்ள ரவுடிகள் யார் யார்; அவர்களுக்கு இடையே பகை உள்ள ரவுடிகள் உள்ளனரா என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. தனிப்படையின் ஒட்டுமொத்த பார்வையும் ரவுடிகள் பக்கம் திரும்பி உள்ளது.நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மீதான கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kasimani Baskaran
ஜூலை 14, 2024 21:16

அரை நூற்றாண்டாக ரெளடிகள் ஊக்கத்துடன் வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.


lana
ஜூலை 14, 2024 20:13

சரியாக கண்காணித்து என்ன செய்ய போகிறது காவல்துறை. கட்டிங் வேண்டும் ஆனால் வசூல் செய்யுங்கள். இது தவிர வேறு ஒன்றும் நடக்காது


D.Ambujavalli
ஜூலை 14, 2024 16:48

எப்படி, எப்படி ஒரே நாளில் இத்தனை ஆயிரம் ரவுடிகள் 'பிறந்து' வந்தார்கள்? இத்தனை காலமும் போலீஸ் உளவுத்துறை எல்லாம் ஆழ் துயிலில் இருந்து இன்றுதான் விழித்துக்கொண்டதா ? இன்னும் புகுந்து தேடப் போனால் ஒவ்வொரு அமைச்சர், எம் எல். ஏ, என், கவுன்சிலர் கீழ் 'பணிபுரியும் ' இதற்கு இணையான ரவுடிகள் இருப்பார்கள் அவர்களைத் தொடக்கூட முடியாது


Anantharaman Srinivasan
ஜூலை 14, 2024 11:15

போலீஸ் துணையுடன் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எத்தனை ரௌடிகள் ..?


S. Gopalakrishnan
ஜூலை 14, 2024 14:43

எல்லாரும்தான் !


Nandakumar Naidu.
ஜூலை 14, 2024 10:28

26,0000 க்கும் மேல் ரவுடிகள் தமிழகத்தில். வெட்கமாக இல்லை சொல்வதற்கு. இதில் 5 க்ககு மேல் வழக்குகள் உள்ள ரவுடிகளை எனகவுன்டரில் போட்டு தள்ள வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேல் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள், போலி டாக்டர்கள், மருந்துகள் கலப்படம் செய்பவர்கள், எல்லா விதமான உணவுப்பொருட்கள் கலப்படம் செய்பவர்கள், தேச விரோதிகள், அனைவரையும் மிக பயங்கரமான ரவுடிகள் பட்டியலில் சேர்த்து உடனடியாக எனகவுன்டரில் போட்டு தள்ள வேண்டும் என்பது எனது ஆணித்தரமான வேண்டுகோள். தமிழகம் தேச, சமூக விரோதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என்பது தான் உண்மையான தமிழகம். இதற்கு முதலில் அரசியல் வாதிகளும், ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களும் ரவுடியிசத்தை கை விட பெண்டும்.( கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை) செய்வார்களா?


sankaranarayanan
ஜூலை 14, 2024 10:12

அக்னி வீரர்கள் எப்படி பாதுகாப்புப்படைக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறதோ அதேபோன்று அத்தனை ரவுடிகளும் விரைவிலேயே தமிழக அரசியல் கட்சிகளின் அங்கத்தினராக ஆகிவிடுவார்கள்


krishna
ஜூலை 14, 2024 09:43

26000 ROWDIGAL. AAHA OOHO NAMMA MUDHALVAR PERUMIDHAM. IDHILUM INDHIAVIL NO 1 MAANILAM DRAVIDA MODEL AATCHI.


GoK
ஜூலை 14, 2024 09:38

இளைஞர் அணியிலே சேத்திடுங்க வாரிசு குஷியாயிடும்


Sundar
ஜூலை 14, 2024 08:38

அரசியல் ரவுடிகள், போலீஸ் ரவுடிகள், வக்கீல் ரவுடிகள், நீதி தவறும் நீதிபதிகள் ஆபத்தானவர்கள்.


SUBBU,MADURAI
ஜூலை 14, 2024 08:10

546 தனிப்படையில் சரி பாதியை மதுரைக்கு அனுப்ப வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை