உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்": முதல்வர் ஸ்டாலின்

"சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்": முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: 'சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தேர்தலுக்கு முன்பே பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 100 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தோம். சாத்தியமுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.

பேரூராட்சி டூ நகராட்சி

ரூ.51 கோடி செலவில், அரூர் அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மக்கள் இருக்கும் இடத்திலேயே மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காண, மக்களுடன் முதல்வர்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியாக உள்ள அரூர், நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. சொல்லாததையும் செய்வோம். சொல்லாமலும் செய்வோம்.

பொறாமை

தி.மு.க., அரசு மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இதனால் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். தமிழகத்தில் தொடர் தோல்வி அடைந்த பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு நல்ல மனம் மற்றும் குணம் இல்லை. 10 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ., தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை.

வெற்றி ரகசியம்

மத்திய அரசு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். இது தான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். மக்களுக்கு உண்மையாக இருந்து வளர்ச்சியை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Matt P
ஜூலை 13, 2024 22:06

கள்ளச்சாராயம் காய்ச்சி பல கொலைகளுக்கு காரணமாவோம், வூழ்ல் செஞ்சு அவர்கள் வாழ்வை வளப்படுத்தி கொள்வார்கள் என்று சொல்லி கொண்டா செய்ய முடியும்?


S. Narayanan
ஜூலை 13, 2024 13:18

சொள்ளததையும் செய்வீர்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். சாராயம் விஷம் கலந்து இன்னும் எத்தனை பேரை கொல்ல போகிறீர்கள்.


Godyes
ஜூலை 13, 2024 13:04

சொல்லாதது சொல்லாமல் செய்தது ரெண்டும் ஒண்ணுதான். இதை கேட்கும் போது புல்லரிக்குதுபா.


s sambath kumar
ஜூலை 12, 2024 12:13

உண்மைதான் தலீவா, அதான் கள்ளக்குறிச்சியில் பார்த்தோமே?


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூலை 12, 2024 09:53

அப்பிடியே "செய்யாததையும் சொல்வோம், செய்ததையும் சொல்லமாட்டோம்" என்றும் கூறிவிடுங்களேன்.


Ramesh Sargam
ஜூலை 12, 2024 08:44

நீட் விளக்கு பத்தி வாய தொறக்கமாட்டோம்.


G Mahalingam
ஜூலை 12, 2024 07:46

திராவிட மாடல் ஆட்சி நாறுது. பணம் குவாட்டர் பிரியாணி கொடுத்து எத்தனை நாட்கள் தான் மக்களை ஏமாற்றி வோட்டு வாங்குவீர்கள்.


SVR
ஜூலை 12, 2024 06:50

அதைத்தானே 1967 முதல் செய்து வருகிறீர்கள். சொல்லாத சயின்டிபிக் உழலை தான் சொல்லாமலே செய்து 3-4 தலைமுறையை ஒண்ணுமே இல்லாமல் செய்திருக்கிறீர்கள். இது ஒரு உலக அதிசயம். தமிழ் மக்கள்தான் இலவசமாக எது கிடைத்தாலும் அதற்கு மறுபடியும் மறுபடியும் வோட்டு போடுவார்கள் என்று நிரூபணமானது. வேலையே செய்யாமல் எல்லாம் கிடைக்கும் என்பதை ஒரு வாழ்க்கை முறையாக செய்தவர்கள் நீங்கள். அதை தற்போது பிரிட்டன் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்தாகிவிட்டது. இது தான் சர்வதேச அளவில் செய்த ஒன்று.


RAAJ68
ஜூலை 12, 2024 04:45

MAKKAL என்னவோ முதல்வர் பக்கம் தான் irupathu போன்று கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டுள்ளார். வாசகர்களின் கருத்துகளை அவருக்கு பகிரவும்.


RAAJ68
ஜூலை 12, 2024 04:40

இரண்டுக்கும் என்ன வித்யாசம். 30000 கோடி சுறுட்டியது சொல்லாமல் செய்தது. சொல்லாததை செய்தது 60000 கோடி சுவாகா செய்தது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை