மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
7 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
7 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
7 hour(s) ago | 1
சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான, 11 ரவுடிகளுக்கு, ஐந்து நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 5ம் தேதி மாலை, 7:00 மணியளவில், சென்னை பெரம்பூர் வேணுகோபாலசாமி கோவில் தெருவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், 52; மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை கிராமத்தைச் சேர்ந்த ரவுடி ஆற்காடு சுரேசின் சகோதரர் பாலு, 39; சென்னை பெரம்பூர் பொன்னுசாமி நகரை சேர்ந்த திருமலை, 45, உட்பட, 11 ரவுடிகளை கைது செய்து, பூந்தமல்லி சிறையில் அடைத்துள்ளனர்.அவர்களை, ஏழு நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், செம்பியம் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு, நீதிபதி தயாளன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 பேருக்கும் ஐந்து நாள் காவல் விசாரணைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
7 hour(s) ago | 15
7 hour(s) ago | 3
7 hour(s) ago | 1