உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலகில் 50 சதவீத நீர் பற்றாக்குறை

உலகில் 50 சதவீத நீர் பற்றாக்குறை

உலகில் மக்கள் பெருக்கம் அதிகரிப்பால் உணவு, நீர், சுகாதார தேவைகள் அதிகரித்து விட்டன. இதை பூர்த்தி செய்ய உலகின் வளங்கள் குறிப்பிட்ட அளவிலேயே உள்ளன. இது பெரும் சவாலானது. உலகில், 50 சதவீத பகுதிகளில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. எரிசக்திக்கு நாம் புதைபடிவ எரிபொருட்களையே நம்பியுள்ளோம். தற்போது, புதுபிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த துவங்கி உளளோம். அதில், சிக்கல் என்னவென்றால் இதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய முடியாது; அவை மிகவும் ஆபத்தானவை.நீர்நிலைகளில் படர்ந்துள்ள நைட்ரஜன், நீர்நிலைகளில் பாசியை உருவாக்கி, அவற்றில் உள்ள உயிரினங்கள் முழுதுமாக அழித்து விடும். இதை சமாளிக்க அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.- ஜெகதீஷ்குமார்பல்கலை மானிய குழு தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ