உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 ஆண்டு கால ஆட்சியில் 5,000 பேர் கொலை; தடுத்து நிறுத்துமா தி.மு.க., அரசு? ராமதாஸ் கேள்வி

3 ஆண்டு கால ஆட்சியில் 5,000 பேர் கொலை; தடுத்து நிறுத்துமா தி.மு.க., அரசு? ராமதாஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி வெளியப்பன், ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில் மோகன், கோவை சோமனூர் ஆத்துப்பாளையத்தைச் சேர்ந்த கோகுல், கோவை உக்கடம் கெம்பட்டியைச் சேர்ந்த இன்னொரு கோகுல், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னபாறையூரைச் சேர்ந்த பழனி, சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என 6 பேர் நேற்று ஒரே நாளில் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எவரின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

5,000 கொலைகள்

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 2021-22ம் ஆண்டில் 1,558 படுகொலைகள், 2022-23ம் ஆண்டில் 1,596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன. இவற்றை தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினே ஒப்புக் கொண்டிருக்கிறார். 2023-24ம் ஆண்டில் 1600க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில், அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை.

படுதோல்வி

தமிழகத்தில் படுகொலைகளைத் தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று கூறினால், முன்பகையால் நடக்கும் கொலைகளை எவ்வாறு தடுப்பது? என்றும், பழைய ரவுடிகளை கண்காணித்தால் புதிய ரவுடிகள் உருவாகிறார்கள் என்றும் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறுகிறார். சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதையே சட்ட அமைச்சரின் கருத்து காட்டுகிறது.

சொர்க்கபுரி

சென்னையில் தொடங்கி தென்காசி வரை படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய கொடூர படுகொலைகள் குறித்தெல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. தமிழகத்தில் நடப்பதை தெரிந்து கொள்ளாமல் தம்மைச் சுற்றி மாய வளையத்தை அமைத்துக் கொண்டு தமிழகம் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் பாட்டை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். அவர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதை

தமிழகத்தில் கொலைகளும், குற்றங்களும் அதிகரிக்க முதன்மைக் காரணம் மது மற்றும் கஞ்சா போதைக் கலாச்சாரம் தான். படித்து வேலைக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி கூலிப்படையில் சேர்ந்து கொலை செய்யும் கொடுமை தமிழகத்தில் நிகழ்கிறது. இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதுடன் , கஞ்சா கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும். அதன் மூலம் படுகொலைகளை குறைத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mani . V
செப் 10, 2024 05:27

மிஸ்டர் ராமதாஸ், அதைச் செய்வதே திமுக வினர்தானே.


S Raman
செப் 09, 2024 19:17

சாராயம் விற்பதை போலவே தமிழக MLA MPs கஞ்சாவும் விற்பார்கள். கொள்ளை லாபம் பார்ப்பார்கள்.


Ms Mahadevan Mahadevan
செப் 09, 2024 15:12

தனிப்பட்ட விரோததில் நடக்கும் கொலைகளுக்கு அரச குறை சொல்ல முடியாது. மது போதை பொருள் உபயோகம் ஒரு காரணம். திரைப்படம், டிவி எல்லாம் வன்முறையை உயர்த்தி பிடிப்பதும் ஒரு காரணம். தனி மனித ஒழுக்கம் இன்மை, சகிப்பு தன்மை இன்மை இவையும் காரணம் . மேற்படி நல்ல குணங்களை கற்று கொடுக்காத குடும்ப கல்வி இவையும் கொலைகள் அதிகரிக்க காரணம். அற போதனைகள் உடனடி தேவை


N.Purushothaman
செப் 09, 2024 15:42

தனிப்பட்ட விரோதத்தில் நடக்கும் கொலைகளுக்கு அரச குறை சொல்ல முடியாது//// இந்த கருத்து அபாயகரமானது ......ஒரு ஆன்மீக பேச்சாளரை கைது செய்ய கமிஷனர் முதல் இருநூறு காவலர்கள் செல்லும் அவல நிலை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது ...சட்ட மைச்சர் சொன்ன மாதிரி புதுசு புதுசா குற்றவாளிகள் / கூலிப்படையினர் உருவாகுகின்றனர் அதனால் எங்கல்லா எதுவும் செய்ய முடியவில்லை என்று சொல்வது எவ்வளவு கேடுகெட்டத்தனமோ அதை போல் சொல்ல கூடாது ...இது முழுக்க முழுக்க அரசின் தோல்வியே ...மாநில உளவுத்துறை மற்ற கட்சி தலைவர்களின் உரையாடல்களை ஒட்டு கேட்பதை குறைத்து சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் ..


sridhar
செப் 09, 2024 16:29

ஆக , கொலை கொள்ளை , கற்பழிப்பு , இன்னபிற சமூக விரோத செயல்கள் எதற்கும் அரசு பொறுப்பல்ல .


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 18:25

என்னது தனிப்பட்ட விரோதம் காரணமா ?? அதிமுக ஆட்சியில் எப்போதாவது ஆங்காங்கே கொலை, கற்பழிப்பு நடந்தால் கூட உனது புலிகேசி மன்னன் குதித்த குதி இருக்கிறதே ..... அப்பப்பா ....


Mr Krish Tamilnadu
செப் 09, 2024 14:58

பொறும் ஐயா, அமெரிக்கா கணக்கையே இன்னும் சரி பார்க்கலா? அதுக்குள்ள அடுத்த கணக்கா...?. சராசரி ஒரு நாளைக்கு ஐந்து தானே? இதுக்கு போய்.. சட்டம் ஒழுங்கு? கூட்டணி மாறிட்டு குண்டாக மண்டாக அப்பா, பையன் கேள்வியா கேட்குறீங்க?.


N.Purushothaman
செப் 09, 2024 14:34

அட ..திருட்டு திராவிடன் மூணு வருஷத்துல இவ்வளவு கொலை பண்ணியிருக்கானா ? பேஷ்.. பேஷ் ...சமூக நீதி காத்தான் ஆட்சின்னா சும்மாவா ?


அருணாசலம்
செப் 09, 2024 14:23

டாக்டர் ஐயாவுக்கு ஏதோ வேண்டுமாம். அனுப்புங்கள்.


God yes Godyes
செப் 09, 2024 14:15

ஒரு குடிகாரன் சொன்ன வியாக்யானம்.அவன் கெடக்கறான் குடிகாரப்பய.எனக்கு ரெண்டு மொந்த ஊத்து. நாக்கல தடவ ஊறுகாய் எங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 14:02

வரப்போற சட்டசபைத் தேர்தல் கூட்டணிக்காக மடக்கி கேள்வி கேட்குறீங்க ன்னு திமுக மட்டுமில்ல ... யாருமே நினைப்பாங்க .....


தமிழ்வேள்
செப் 09, 2024 13:44

கொலை செய்பவன் , அதற்கு வசதி செய்துகொடுப்பவன் எல்லோரும் திமுக கும்பலுக்கு படியளக்கும் ஆட்கள் ....கட்சிக்காரன் ...தேர்தலில் வாக்கு கொத்து கொத்தாக கையில் வைத்துள்ளவன் ..எனவே அரசு நடவடிக்கை நஹி ...இந்த கேள்வி கேட்டதற்காக ராமதாஸ் மீது வழக்குக்கு பரிந்துரை செய்யும் கேடுகெட்ட அரசு ..


kannan
செப் 09, 2024 13:21

திமுக அரசு செய்யாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை