உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 64 லட்சம் பள்ளி சீருடைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

64 லட்சம் பள்ளி சீருடைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

விருதுநகர்: தென் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க 64 லட்சம் சீருடைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக விருதுநகர் மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர் வெங்கடேசலு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்காக 64 லட்சம் சீருடைகள் தயாரித்து வழங்க விருதுநகர் மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதற்காக தமிழக அரசு நுால்கள் வழங்கியது. இப்பணியில் 4253 நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 32 லட்சம் சீருடைகளை தயாரித்து அடுத்தகட்ட பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள சீருடைகள் தயாரிக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு தென் மாவட்டங்களில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க அனுப்பி வைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை