உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " இது வெற்றி பயணம் " - சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

" இது வெற்றி பயணம் " - சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: 'அமெரிக்க பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூ.7,618 கோடி முதலீடு பெறப்படுவதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என இன்று(செப்.14) முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்.சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 17 பயணத்தை முடித்து கொண்டு, நேற்று(செப்.,13) அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட முதல்வர் துபாய் வழியாக, இன்று(செப்.,14) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

11,516 பேருக்கு வேலை

பின்னர் நிருபர்கள் சந்திப்பில், ஸ்டாலின் கூறியதாவது: அமெரிக்கா அரசு முறை பயணம் வெற்றி பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்தது. தனிப்பட்ட எனக்கான வெற்றி அல்ல, தமிழக மக்களுக்கான வெற்றி பயணம். அமெரிக்க பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. ரூ.7,618 கோடி முதலீடு பெறப்பட்டதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்னும் பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்தேன். திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பயன் அளிக்கும்.எங்களது பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் சென்னை வருகிறது போர்ட் நிறுவனம். புதிய கல்விக்கொள்கை, மெட்ரோ பணிகளுக்கான நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன். மதுவிலக்கு மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துவிட்டார்; அதற்கு மேல் நான் சொல்ல வேண்டியது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இ.பி.எஸ்., க்கு பதில்

'கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்பதை தெளிவாக கூறியுள்ளோம். இதனை இ.பி.எஸ்., படித்து பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். என்னென்ன முதலீடுகள் தி.மு.க., ஆட்சியில் வந்துள்ளன என்பதை விரிவாக கூறியுள்ளோம். இ.பி.எஸ்., முதல்வராக இருந்த போது வெளிநாடு சென்றதில் 10 சததவீதம் கூட தொழில் துவங்கவில்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை எல்லாம் சொன்னால் அவருக்கு அவமானமாக இருக்கும். முதலீடுகள் பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளேன். தொழில்துறை அமைச்சரும் விளக்கம் தந்துள்ளார்' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் உள்ள பிரச்னைகளை பன், ஜாம், க்ரீம் என்று பிரபல ஹோட்டல் உரிமையாளரான சீனிவாசன் பேசினார். இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்விக்கு, 'அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வலுத்தது; பழுக்கிறது!

முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சரவை மாற்றம் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், 'நாங்கள் தி.மு.க., சொன்னதை தான் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம். தி.மு.க., பவளவிழா நடைபெற இருக்கும் நிலையில் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் என்று கூறினார். அவரின் இந்த பதில் மூலம் அமைச்சரவை மாற்றம் உறுதி என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில உதயநிதி துணை முதல்வராக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 122 )

M Ramachandran
அக் 14, 2024 01:01

சிரிப்பை அடக்க முடியாமல் துறை ஏன் ராகுல் மாதிரி மொட்டு வழியாய்ய்ய பார்க்கிறார்.


Venkatesh
செப் 24, 2024 20:54

இதெல்லாம் ஒரு பொழப்பு....


sethu
செப் 26, 2024 14:03

நீங்கள் இப்படியும் உருட்ட முடியுமா என துரைமுருகன் கொடுக்கும் ஆக்சனைப்பார்த்து இப்படி ஒரு பொருத்தமான கேள்வி கேட்கிறீர்களா/ அல்லது உங்களுக்கே இது தோணுச்சா


Narayanan
செப் 24, 2024 15:17

உங்கள் பி டி ஆர் பழனிவேல் சொன்னாரே உங்களின் மகனும் மருமகனும் 35,000 கோடி சுருட்டியதாக . அதை சொன்னார் என்று நிதி அமைச்சர்பதவியைபிடுங்கி வேறு ஒருவருக்கு கொடுத்தீர்கள் .அதைவைத்தே தொழில் தொடங்கலாமே , அதைவிடுத்து ஏன் வெளிநாட்டுக்கு போய் பிச்சையெடுக்கணும் . புரியவில்லை . இப்போ அண்ணாமலை நீங்கள் லண்டனில் முதலீடு செய்த 35,000 கோடி விவரம் திரட்டி வந்து கலக்கப்போகிறார்


Narayanan
செப் 24, 2024 14:58

7,000 கோடிக்கு முதலீடுகளை இங்கிருந்தே பெறலாமே . மேலும் ஏற்கனவே இங்கு இருக்கும் நிறுவனம் விஸ்தரிக்கவே அவர்கள் முதலீடு செய்கிறார்கள் . அடுத்த மாநிலத்தவர்கள் 25,000 கோடிக்கு மேல் முதலீட்டை கொண்டுவருகிறார்கள் வெறும் நான்கு நாட்களில் . ஒப்பந்தம்தான் கையெழுத்து ஆகி இருக்கிறது . வருவது நிச்சயமில்லை .நீங்கள்தான் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக மின்சாரக்கட்டணத்தை ஏற்றிக்கொண்டே போகிறீர்கள் . ஒருவரைமுறை இல்லை . எப்படி வருவார்கள் உங்களை நம்பி ? உங்களை நம்பி வாக்களித்த உங்கள் மக்களையே வஞ்சிக்கும் நீங்கள் எப்படி


vijay
செப் 23, 2024 16:44

வெற்றியா...யாருக்கு? யாருக்கோ...நிச்சயம் மக்களுக்கு வெற்றி அல்ல. எப்புடி


xyzabc
செப் 22, 2024 21:05

துபாய் ஸ்பெயின் அமெரிக்கா முடிந்தது. அடுத்த வெற்றி பயணம் எப்போ ? மக்கள் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். கொத்தடிமைகள் நிறைந்த கட்சிக்கு எல்லாமே வெற்றி தான். பண பலம் கொண்ட தி மு க எம் பி கள், மந்திரிகள், எம் எல் ஏ க்கள் இருக்கும் வரை எல்லாமே வெற்றி தான்.


Minimole P C
செப் 21, 2024 09:12

See the faces of those behind him. They feel the statements made are just to mislead.


Minimole P C
செப் 21, 2024 09:09

Waste trip. Even assuming their claim are real, just for 7k crores he spent somuch money and time. One of his MP could able to invest 26K crores in Srilanka, what is the amount these fellows are . Better they may invest in TN itself in proxies.


Ramesh Sargam
செப் 20, 2024 12:41

உங்கள் வெற்றிப்பயணத்தை கொண்டாட விழா ஏதாவது எடுப்பீர்களா? அதற்கு பலகோடிகள் நீங்கள் வாரிக்கொண்டுவந்த அந்த முதலீட்டில் கைவைப்பீர்களா?


karutthu
செப் 17, 2024 12:56

முதல்வர் தொழிற்சாலை கட்டினால் அதில் ஒரு புகைக்கூண்டு கூட இருக்கக்கூடாது அப்படி இருந்தால் ஸ்டெர்லிட் மாதிரி அவரகள் போராட்டம் நடத்துவார்கள்


புதிய வீடியோ