உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 நகரங்களில் வெயில் சதம்

8 நகரங்களில் வெயில் சதம்

சென்னை:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சிலநாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை, கூடுதலாக வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நேற்று ஈரோடு, கரூர் பரமத்தியில் வெயில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், சேலம், திருப்பத்துார், திருச்சி, வேலுார் நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவானது. சென்னையில் நடப்பு ஆண்டில் முதல் முறையாக, நேற்று தான் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசை தொட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கை:தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை தொடரும். இதில், ஒரு சில இடங்களில், அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை