உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் நிலையங்களில் 7 ஆண்டுகளில் 9,630 சிறார் மீட்பு

ரயில் நிலையங்களில் 7 ஆண்டுகளில் 9,630 சிறார் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில், கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில்வே பாதுகாப்பு படையினர், 9,630 சிறுவர்களை மீட்டுள்ளனர்.பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமையின் கொடுமை போன்ற காரணங்களால், சிறுவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ரயில்களில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையத்தில் இறங்குகின்றனர். பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்கும்போது, அவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்கப்படுகின்றனர்.தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில், 2018 முதல் 2024 மே வரை, 9,630 சிறுவர்கள் மீட்டகப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்ட, 9,630 சிறுவர்களில், 8,698 பேர் ஓடிப்போனவர்கள். மேலும், 132 பேர் காணாமல் போனவர்கள்; 309 பேர் ஆதரவற்றவர்கள்; 19 பேர் கடத்தப்பட்டவர்கள்; 44 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். குழந்தைகள் கடத்தலில் இருந்து, 105 பேர் காப்பாற்றப்பட்டனர். கடந்த ஆண்டில் 1,215 சிறுவர், சிறுமியர்; நடப்பாண்டில் 788 சிறுவர், சிறுமியர் மீட்கப்பட்டுள்ளனர்.பல்வேறு ரயில் நிலையங்களில், குழந்தை உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்படும்போது, அவர்களிடம் ஒப்படைக்கப்படுவர். தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கப்படுவர்.குழந்தைகள் மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு, பல்வேறு தரப்பினர் ஆதரவு ஆகியவற்றால், சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் தவிக்கும் சிறுவர், சிறுமியருக்கு ஏதாவது உதவி தேவைப்படும்போது, ரயில்வே உதவி எண் 139, குழந்தை உதவி எண் 1098 ஐ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ديفيد رافائيل
ஜூலை 19, 2024 08:49

இந்த மாதிரியான சிறுவர்களை அப்படியே விட்டு விடுங்க. இவர்களால் தான் நாட்டுக்கு பிடிச்ச சாபக்கேடு. Exception பெற்றோர்களின் பார்வையில் தவறி வழி தவறியவர்களுக்கு கண்டிப்பா உதவி செய்து அந்த சிறுவர்களை மட்டும் பெற்றவர்களிடம் ஒப்படைக்கலாம்.


Ramesh Sargam
ஜூலை 19, 2024 08:47

9630 சிறார்கள் மீட்கப்பட்டதற்கு மிக்க நன்றி. மீட்கப்படாத மற்றும் பல ஆயிரம் சிறார்களை எப்பொழுது மீட்பீர்கள்? மீட்கவேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி