உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமிஷனர் பெயரில் இருந்த பைக்கை பயன்படுத்திய பலாத்கார குற்றவாளி

கமிஷனர் பெயரில் இருந்த பைக்கை பயன்படுத்திய பலாத்கார குற்றவாளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியது தெரிய வந்தது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டரை, ஆக., 9ல், பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதலில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சஞ்சய் ராய், உண்மை கண்டறியும் சோதனையின் போது, 'நான் ஒரு நிரபராதி' என, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இந்நிலையில், சம்பவம் நடந்த நாளில், சஞ்சய் ராய் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

ஆக., 9 அதிகாலை, 'போலீஸ்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, கோல்கட்டாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு சஞ்சய் ராய் சென்று வந்துள்ளார்.பின், அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர், மருத்துவமனைக்கு வந்து, பயிற்சி பெண் டாக்டரை கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த இருசக்கர வாகனத்தை சி.பி.ஐ., பறிமுதல் செய்துள்ளது. தன்னை ஒரு போலீஸ் ஆகவே கருதி, பல்வேறு முறைகேடுகளில் சஞ்சய் ராய் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.இந்த விவகாரம் குறித்து, கோல்கட்டா காவல் துறை வெளியிட்ட பதிவில், 'கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்ட, சஞ்சய் ராய் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்ததே நாங்கள்தான். 'இது குறித்து சமூக வலைதளங்களில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். கோல்கட்டா காவல் துறையின் பல்வேறு துறைகளின் பணிகளுக்காக வாங்கப்படும் அனைத்து வாகனங்களும் அதிகாரப்பூர்வமாக கமிஷனரின் பெயரில் பதிவு செய்யப்படுவதே வழக்கம்' என, விளக்கம் அளிக்கப்பட்டது.

'எய்ம்ஸ்' உதவியை நாடும் சி.பி.ஐ.,

பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், மரபணு மற்றும் தடயவியல் அறிக்கைகளை, 'எய்ம்ஸ்' மருத்துவமனை நிபுணர்களுக்கு அனுப்பி கருத்து கேட்க, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் வாயிலாக, இந்த குற்றத்தில் சஞ்சய் ராய் மட்டும் ஈடுபட்டுள்ளாரா அல்லது மற்றவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ganesh Subbarao
ஆக 28, 2024 13:47

நீங்க நிறைய க்ரைம் படங்க பாக்கறிங்க போலயே


RAMAKRISHNAN NATESAN
ஆக 28, 2024 11:35

டாக்டர் அபயா, மருத்துவமனை/கல்லூரி நிர்வாகத்தின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் அறிந்து வைத்திருந்தார் .... ED அல்லது CBIயிடம் வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தார். குறைந்த பட்சம் நண்பர்கள் மூலமாக ..... எதிரிகளிடம் கோபத்தில் சொல்லியிருப்பார் முகத்திரையைக் கிழிக்கிறேன் ன்று .... அதன் விளைவாக ஆரம்பத்தில் போட்டுத்தள்ள மட்டுமே சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூமுட் SR குற்றவாளிகள் திட்டத்தின் கீழ் வந்து, அவர்கள் அவரை ஒரு கருவியாகப் பயன் படுத்தியுள்ளனர். சிபிஐ விசாரணை இறுதியில் அம்மையார் மிரட்டப்படுவார் .... திரிணாமுல் எம்.பி.க்கள் மத்திய மந்திரிசபையில் சேர்க்க அது வழிவகுக்கும். தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 28, 2024 10:20

இச்செய்தி அதிர்ச்சியளிக்கவில்லை .... ஏனென்றால் தனது அரசு நிர்வாகத்தையே பயன்படுத்திக்கொள்ள குற்றவாளிகளை அம்மாநில முதல்வர் அனுமதித்திருக்கிறார் ..... யதா ராஜா ததா பிரஜா என்று சொல்வார்கள் ...


Barakat Ali
ஆக 28, 2024 09:09

ஏற்கனவே இதே போன்ற மூன்று குற்றங்கள் நடந்த பொழுது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி - அவர் தங்கள் சார்பாக நடந்துகொள்வதால் அவரது சமூகம் குறித்து யாரும் பேசுவதில்லை - பாதிக்கப் பட்டவர்களுக்காக பேசாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே பேசினார் ..... நடந்து கொண்டார் ..... குறிப்பிட்ட வாக்குவங்கியை அவரது கட்சி தொடர்ந்து பெற்று வருவதால் அவரை,, திரிணாமூல் காங்கிரசை ஒன்றுமே செய்ய முடியாது ......


Indian
ஆக 28, 2024 08:54

இன்னும் ஒரு இருபது வருஷம் இந்த கேச நீட்டுங்க , அதுக்குல்ள்ள பொண்ண பெத்தவங்க , நெஞ்சு வெடிச்சு செத்து போயிடுவாங்க ..


Indian
ஆக 28, 2024 08:52

தினமும் மட்டன் பிரியாணி , கொடுத்து நன்றாக கவனித்து கொள்ளவும் . உடம்பு முக்கியம் .


SIVA
ஆக 28, 2024 07:33

மம்தா அரடு செய்து தவறு இந்த கேஸ் முடிவில்லாமல் நீளுகிறது. தண்டனை எப்போது


அப்பாவி
ஆக 28, 2024 07:30

இப்பிடி பூ சுத்தி பூ சுத்தி விசாரணை செய்யுங்க. போற போக்கில் அவந்தான் குற்றவாளிங்கறதையே மறந்து முப்பதாயிரம்.பக்கத்துக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுங்க. கோர்ட்டும் டீ குடிச்சது தப்பா? பைக்கில் போனது தப்பான்னு அலசி ஆராய்ஞ்சு குற்றம் செய்ததற்கு ஆதாரம் இல்லேன்னு சொல்லி விடுதலை செஞ்சுருவாங்க.


Srinivasan K
ஆக 28, 2024 08:09

what to do. we have such police and state government helping culprits it takes time to establish truth in our country


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 28, 2024 10:28

பாவி .. உனது திமுக ஆட்சியையும் இதே லட்சணம்தான் ....


Svs Yaadum oore
ஆக 28, 2024 07:03

கோல்கட்டா காவல் துறையின் பணிகளுக்காக வாங்கப்படும் அனைத்து வாகனங்களும் கமிஷனரின் பெயரில் பதிவு செய்யப்படுவதே வழக்கம் என்று கொல்கத்தா போலீஸ் இதற்கு விளக்கம் ....இது உண்மையாக இருந்தாலும் காவல் துறை என்பது மாநில அரசின் ஏவல் துறையாக செயல்பட்டால் இப்போதைய மிக மிக கேவலமான நிலைமைதான் ...நேற்று கொல்கத்தா போலீஸ் மாணவர் போராட்டத்தில் கடும் வன்முறை .....போலீஸ் மொத்தமாக மக்கள் நம்பிக்கையை இழந்தால் இது போல் நிலைமைதான் ... இங்கும் அதே நிலைமைதான் ..