உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெயிலில் சுருண்டு விழுந்து வாலிபர் பலி

வெயிலில் சுருண்டு விழுந்து வாலிபர் பலி

திருநெல்வேலி:திருநெல்வேலியில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து வாலிபர் இறந்தார். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளத்தை சேர்ந்தவர் ஐகோர்ட் ராஜா 35. இவர் அருகில் காடுவெட்டி கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று சுட்டெரித்த வெயிலில் அங்கிருந்து நடந்து வரும்போது திடீரென மயங்கி விழுந்தார். உடலில் வலிப்பு ஏற்பட்டது. அவரை மீட்டு சிங்கிகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று வெயில் 104 டிகிரி பதிவானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ